வரலாற்றில் இன்று (26.07.2024)

 வரலாற்றில் இன்று (26.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 26 (July 26) கிரிகோரியன் ஆண்டின் 207 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 208 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

657 – அலி இப்னு அபு தாலிப் தலைமையிலான படைகள் முதலாம் முஆவியாவின் படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஈடுபட்டனர்.
811 – பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
1509 – விஜயநகரப் பேரரசின் மன்னனாக கிருஷ்ணதேவராயன் முடிசூடினார்.
1788 – நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
1803 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
1847 – லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1891 – தாகித்தி பிரான்சுடன் இணைந்தது.
1936 – அச்சு நாடுகள் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் தலையிட முடிவு செய்தன.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லிவீவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.
1945 – ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.
1945 – ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றது. வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார்.
1952 – எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.
1953 – கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1956 – அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
1957 – குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
1957 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1958 – எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.
1963 – மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1965 – மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
1971 – அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.
1974 – ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
1994 – எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
2005 – டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

பிறப்புகள்

1842 – ஆல்பிரடு மார்ஷல், ஆங்கிலேய பொருளியல் அறிஞர் (இ. 1924)
1856 – ஜார்ஜ் பெர்னாட் ஷா, எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)
1919 – ஜேம்ஸ் லவ்லாக், ஆங்கிலேய இயற்பியலாளர்
1927 – ராம் ராம்சந்த், இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2003)
1928 – இஸ்டான்லி குப்ரிக்கு, அமெரிக்கத் திரைப்பட இயக்குனர் (இ. 1999)
1933 – எட்மண்ட் ஃவெல்ப்ஸ், பொருளியல் அறிஞர்
1933 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
1939 – ஜோன் ஹவார்ட், ஆத்திரேலியாவின் 25வது பிரதமர்
1955 – ஆசிஃப் அலி சர்தாரி, பாக்கித்தானின் 11வது அரசுத்தலைவர்
1964 – சாண்ட்ரா புல்லக், அமெரிக்க நடிகை
1967 – ஜேசன் ஸ்டேதம், ஆங்கிலேய நடிகர்
1968 – ஒலிவியா வில்லியம்ஸ், ஆங்கிலேய நடிகை
1971 – மேரி ஆன் மோகன்ராஜ், எழுத்தாளர்
1973 – கேட் பெக்கின்சேல், ஆங்கிலேய நடிகை

இறப்புகள்

432 – முதலாம் செலஸ்தீன் (திருத்தந்தை)
1857 – ஒராசியோ பெட்டாச்சினி, யாழ்ப்பாணம் ஆயர்
1934 – வின்சர் மெக்கே, அமெரிக்க தயாரிப்பாளர் (பி. 1871)
1952 – இவா பெரோன், அர்ச்சென்டீன நடிகை, அரசியல்வாதி (பி. 1919)

சிறப்பு நாள்


மாலைதீவு – விடுதலை நாள் (1965)
லைபீரியா – விடுதலை நாள் (1847)
கார்கில் போர் வெற்றி நாள் (இந்தியா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...