‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான “டிமான்டி காலனி” திரைப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக  இருந்தது. நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார்.

டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, இமைக்கா நொடிகள் மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகும் என இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருந்தார்.  அதன்படி, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டி காலனி 2’ உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைத்துள்ளார்.  இந்த நிலையில், ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...