ரஜினி, கமல், விஜய், அஜித்தின் ஆண்டு வருமானம்: ஃபோர்ப்ஸ் தகவல்
நடிகர்களின் ஆண்டு வருமானம் :
2019-ம் ஆண்டுக்கான பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவில் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. புகழ் மற்றும் வருமானத்தின் அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவிலான பட்டியலில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, முதலிடம் பிடித்துள்ளார். அக்டோபர் 1, 2018 முதல் செப்டம்பர் 30, 2019 வரை ரூ. 253 கோடி வருமானம் ஈட்டியுள்ளார் விராட் கோலி. பட்டியலில் அக்ஷய் குமாருக்கு 2-ம் இடமும் சல்மான் கானுக்கு 3-ம் இடமும் அமிதாப் பச்சனுக்கு 4-ம் இடமும் தோனிக்கு 5-ம் இடமும் கிடைத்துள்ளன.
இந்தப் பிரபலப் பட்டியலில் தென்னிந்திய அளவில் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்திய அளவில் ரூ. 100 கோடி வருமானத்துடன் அவர் 13-ம் இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 94.8 கோடி வருமானத்துடன் ஏ.ஆர். ரஹ்மான் 16-ம் இடத்தைப் பிடித்துள்ளார். ரூ. 30 கோடி வருமானத்துடன் விஜய் 47-ம் இடமும் ரூ. 40.5 கோடியுடன் அஜித் 52-ம் இடமும் பிடித்துள்ளார்கள். கமலின் ஆண்டு வருமானம் ரூ. 34 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த தென்னிந்திய சினிமா பிரபலங்கள்
13. ரஜினி
16. ஏ.ஆர். ரஹ்மான்
27. மோகன் லால்
44. பிரபாஸ்
47. விஜய்
52. அஜித்
54. மகேஷ் பாபு
55. ஷங்கர்
56. கமல்
62. மம்மூட்டி
64. தனுஷ்
77. திரிவிக்ரம்
80. இயக்குநர் சிவா
84. கார்த்திக் சுப்புராஜ்