குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்தியானந்தா உருவாக்கி உள்ள கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்: சீமான்
என்ஆர்சி மூலம் தமது குடியுரிமை பறிக்கப்பட்டால் நித்தியானந்தா உருவாக்கி உள்ள கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த்தேசிய உணர்வாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், என்ஆர்சி வந்துவிட்டால் எனக்கு குடியுரிமை கிடைக்காது.
என்னை குடியுரிமை அற்றவனாக்கி விட்டால், கவலையில்லை. நான் ஓடிவிடுகிறேன். எங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை ராஜா. கைலாசா என்று ஒரு நாடு உருவாகி விட்டது. எங்கள் அதிபர் நித்யானந்தா இருக்கிறார். அங்கு நாங்கள் அழகாக இருப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சீமான் கூறியதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் கலகலவென சிரித்துவிட்டனர்.