வரலாற்றில் இன்று (22.06.2024)

 வரலாற்றில் இன்று (22.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஜூன் 22  கிரிகோரியன் ஆண்டின் 173 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 174 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 192 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது.
813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார்.
1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர்.
1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
1658 – மூன்றரை மாத கால முற்றுகையின் பின்னர் போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.[1][2]
1774 – வட அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்ற நாடான கியூபெக்கின் அரசமைப்பை நிர்ணயித்து கியூபெக் சட்டத்தைப் பிரித்தானியர் கொண்டுவந்தனர்.
1783 – ஐசுலாந்தின் லாக்கி எரிமலை வெடிப்பினால் உருவான நச்சு வாயு பிரான்சின் லே ஆவரை எட்டியது.
1825 – பிரித்தானிய நாடாளுமன்றம் நில மானிய முறைமையை இல்லாதொழித்தது.
1893 – அரச கடற்படைக் கப்பல் காம்பர்டௌன் பிரித்தானியாவின் விக்டோரியா கப்பலுடன் மோதியதில் 358 பேருடன் அக்கப்பல் கடலில் மூழ்கியது.
1897 – பிரித்தானியக் குடியேற்ற அதிகாரிகள் சார்லசு ராண்ட், சார்லசு ஏயர்ஸ்டு ஆகியோர் இந்தியாவின் புனே நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு கியூபாவில் தரையிறங்கியது.
1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ், மேரி ஆகியோர் ஐக்கிய இராச்சியத்தின் அரசராகவும், அரசியாகவும் முடி சூடினர்.
1918 – அமெரிக்காவின் இந்தியானாவில் தொடருந்து விபத்துக்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். 127 பேர் வரை காயமடைந்தனர்.
1921 – எசுப்பானிய இராணுவம் எசுப்பானிய மொரோக்கோவின் ரிப் மலைத்தொடர் பகுதியில் நடந்த போரில் பேர்பர்களிடம் பெரும் தோல்வி கண்டது.[3]
1930 – ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சு செருமனியுடன் போர்நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: பர்பரோசா நடவடிக்கை: செருமனி சோவியத் ஒன்றியத்தை ஊடுருவியது.
1941 – சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிரான லித்துவேனியாவின் விடுதலைப் போர் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: துப்ருக் கைப்பற்றப்பட்டதை அடுத்து, இர்வின் ரோமெல் படைத்துறை உயர்தர தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஒகினவா சண்டை முடிவுக்கு வந்தது.
1948 – 802 மேற்கிந்தியக் குடியேறிகள் இலண்டன் வந்து சேர்ந்தனர்.[4]
1957 – சோவியத் ஒன்றியம் முதற்தடவையாக ஆர்-12 ரக ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
1978 – புளூட்டோவின் சரோன் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1992 – வாச்சாத்தி வன்முறை: தமிழ்நாட்டில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் நடத்திய வன்முறைகளில் 34 பேர் உயிரிழந்தனர்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.
2002 – ஈரானின் வடமேற்கே 6.5 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 261 பேர் உயிரிழந்தனர்.
2009 – வாசிங்டனில் இரண்டு தொடருந்துகள் மோதிக் கொண்டதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1805 – ஜிசொப்பி மாசினி, இத்தாலிய ஊடகவியலாளர், அரசியல்வாதி (இ. 1872)
1856 – எச். ரைடர் அக்கார்டு, ஆங்கிலேய புதின எழுத்தாளர் (இ. 1925)
1864 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, செருமானியக் கணிதவியலாளர் (இ. 1909)
1892 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (இ. 1951)
1912 – ஆலங்குடி இராமச்சந்திரன், தமிழகக் கடம் கலைஞர் (இ. 1975)
1927 – ஜோ அபேவிக்கிரம, சிங்களத் திரைப்பட நடிகர் (இ. 2011)
1932 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (இ. 2005)
1940 – அப்பாஸ் கியரோஸ்தமி, ஈரானியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
1944 – எ. சிட்னி சுதந்திரன், தமிழக எழுத்தாளர்.
1949 – மெரில் ஸ்ட்ரீப், அமெரிக்க நடிகை, பாடகி
1949 – எலிசபத் வொரன், அமெரிக்க அரசியல்வாதி
1964 – டான் பிரவுன், அமெரிக்க எழுத்தாளர்
1974 – எலன் ஜோ காக்சு, பிரித்தானிய அரசியல்வாதி (இ. 2016)
1974 – விஜய், இந்திய நடிகர்
1974 – தேவயானி, இந்தியத் திரைப்பட நடிகை
1984 – யான்கோ டிப்சாரெவிச், செர்பிய டென்னிசு விளையாட்டு வீரர்
1984 – ஜெரோம் டெய்லர், யமெய்க்காத் துடுப்பாளர்

இறப்புகள்

1874 – ஹோவார்ட் இசுட்டான்டன், ஆங்கிலேய சதுரங்க வீரர் (பி. 1810)
1940 – விளாதிமிர் கோப்பென், உருசிய-செருமானிய அறிவியலாளர், காலநிலை ஆய்வாளர் (பி. 1846)
1969 – ஜூடி கார்லேண்ட், அமெரிக்க நடிகை, பாடகி (பி. 1922)
1987 – பிரெட் அஸ்ரயர், அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1899)
2007 – சு. வேலுப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1921)
2014 – ராம நாராயணன், இந்திய இயக்குநர் (பி. 1949)
2016 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (பி. 1934)

சிறப்பு நாள்

தந்தையர் தினம் (குயெர்ன்சி, மாண் தீவு, யேர்சி)
ஆசிரியர் நாள் (எல் சால்வடோர்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...