வரலாற்றில் இன்று ( 01.06.2024)

 வரலாற்றில் இன்று ( 01.06.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூன் 1 கிரிகோரியன் ஆண்டின் 152 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 153 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 213 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

193 – ரோமப் பேரரசர் டிடியஸ் ஜூலியானஸ் படுகொலை செய்யப்பட்டார்.
1215 – மொங்கோலியப் பேரரசன் செங்கிஸ் கான் பெய்ஜிங் நகரைக் கைப்பாற்றினான்.
1485 – ஹங்கேரியின் மத்தாயஸ் வியென்னாவைக் கைப்பற்றினான்.
1533 – ஆன் பொலெய்ன் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.
1605 – மொஸ்கோவில் ரஷ்யப் படைகள் மன்னன் இரண்டாம் ஃபியோதரையும் அவனது தாயாரையும் சிறைப் பிடித்தனர். இவர்கள் பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.
1792 – கென்டக்கி ஐக்கிய அமெரிக்காவின் 15வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1796 – டென்னசி ஐக்கிய அமெரிக்காவின் 16வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
1812 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவிக்கும்படி காங்கிரசைக் கேட்டுக்கொண்டார்.
1831 – ஜேம்ஸ் ரொஸ் வட முனையைக் கண்டுபிடித்தார்.
1855 – அமெரிக்க நாடுகாண் பயணி வில்லியம் வோக்கர் நிக்கராகுவாவைக் கைப்பற்றினார்.
1869 – மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை தொமஸ் எடிசன் பெற்றார்.
1879 – பிரெஞ்சு இளவரசன் நெப்போலியன் யூஜின் ஆங்கிலோ-சூளு போரில் தென்னாபிரிக்காவில் கொல்லப்பட்டான்.
1910 – ரொபேர்ட் ஸ்கொட் தலைமையிலான ஆய்வுக்குழு தென் முனையை நோக்கிய பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தது.
1941 – ஈராக், பக்தாத்தில் யூதர்களுக்கெதிராக இடம்பெற்ற கலவரங்களில் 180 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1946 – ருமேனியாவின் பிரதமர் இயன் அண்டனேஸ்கு மரணதண்டனக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1947 – சுதந்திரன் இதழ் கொழும்பில் இருந்து வெளியாக ஆரம்பித்தது.
1959 – நிக்கராகுவாவில் புரட்சி ஆரம்பமானது.
1962 – நாசி வதைமுகாம்களை உருவாக்கிய அடொல்ஃப் ஐக்குமன் இசுரேலில் தூக்கிலிடப்பட்டார்.
1964 – சிறேதொகோ தேசிய வனம் ஜப்பானில் அமைக்கப்பட்டது.
1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1978 – டோக்கியோ பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
1979 – 90 ஆண்டுகளுக்குப் பின்னர் ரொடீசியாவில் முதற்தடவையாக கறுப்பினத்தவர்களின் அரசு பதவியேற்றது.
1980 – சிஎன்என் ஒலிபரப்புச் சேவையை ஆரம்பித்தது.
1981 – தெற்காசியாவில் சிறந்த நூலகமாக விளங்கிய யாழ் பொது நூலகம் நள்ளிரவில் சிங்களக் காவல் துறையினரால் எரிக்கப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான பெறுமதி மிக்க நூல்கள் அழிந்தன.
2001 – நேபாள மன்னர் பிரேந்திராவும் அவரது குடும்பமும் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1926 – ஆண்டி கேரிபித், அமெரிக்க நடிகர்
1926 – மாரிலின் மன்றோ, அமெரிக்க நடிகை (இ. 1962)
1937 – மோர்கன் ஃபிறீமன், அமெரிக்க நடிகர்
1940 – ரேனே ஆபெர்ஜோநோசிஸ், அமெரிக்க நடிகர்
1947 – ரோன் வூட், அமெரிக்க இசைக் கலைஞர்
1953 – ரோனி டுன், அமெரிக்க இசைக் கலைஞர்
1959 – ஆலன் வல்டேர், பிரித்தானிய இசைக் கலைஞர்
1960 – சைமன் கல்லுப், பிரித்தானிய இசைக் கலைஞர்
1969 – தெரசா போலோ, அமெரிக்க நடிகை
1974 – அலனிஸ் மாரிஸ்சாட், கனேடிய இசைக் கலைஞர்
1974 – மெலிசா சகேமில்லேர், அமெரிக்க நடிகை
1970 – மாதவன், தமிழ் நடிகர்

இறப்புகள்

1968 – ஹெலன் கெல்லர், அமெரிக்கப் பெண் எழுத்தாளர் (பி. 1880)
1979 – வேர்னர் ஃபோர்ஸ்மன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
1999 – கிறிஸ்தோபர் கொக்கரல், காற்று மெத்தை உந்தைக் கண்டுபிடித்தவர் (பி. 1910)
1996 – நீலம் சஞ்சீவ ரெட்டி, இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் (பி. 1913)
2001 – பிரேந்திரா, நேபாள மன்னர் (பி. 1945)

சிறப்பு நாள்

பன்னாட்டு குழந்தைகள் நாள்
சமோவா – விடுதலை நாள் (1962)
துனீசியா – அரசியல் நிர்ணய நாள், வெற்றி நாள் (1959)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...