வரலாற்றில் இன்று ( 30.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 30  கிரிகோரியன் ஆண்டின் 150 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 151 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 215 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

70 – எருசலேம் முற்றுகை: டைட்டசும் அவனது உரோமைப் படைகளும் எருசலேமின் இரண்டாவது சுவரைத் தகர்த்தனர்.யூதர்கள் முதலாம் சுவருக்குப் பின்வாங்கினர். உரோமர்கள் 15 கிலோமீட்டர்கள் சுற்றியுள்ள மரங்களைத் தறித்து முற்றுகையிட்டனர்.
1381 – இங்கிலாந்தில் விவசாயிகளின் கலகம் ஆரம்பமானது.
1416 – திரிபுக் கொள்கைகளுக்காகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிராகா நாட்டு மெய்யியலாளர் ஜெரோமி காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தினால் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1431 – நூறாண்டுப் போர்: பிரான்சிய வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டாள்.
1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர் ஜேன் சீமோர் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1539 – தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் எர்னாண்டோ டி சோட்டோ தனது 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.
1574 – மூன்றாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தது.
1602 – முதலாவது இடச்சுக் கப்பல் (லா பிரேபிசு) இலங்கையில் தென்பட்டது.[1]
1631 – முதலாவது பிரெஞ்சு மொழிப் பத்திரிகை கசெட் டி பிரான்சு வெளிவந்தது.
1635 – முப்பதாண்டுப் போர்: பிராகா அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1642 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் வழங்கியிருந்த அனைத்து விருதுகளும் இந்நாளில் இருந்து செல்லுபடியாகாது என இங்கிலாந்து நாடாளுமன்றம் அறிவித்தது.
1814 – நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரான்சிய எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.
1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.
1842 – ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பர்ட்டுடன் இலண்டனில் பயணம் செய்கையில் ஜோன் பிரான்சிசு என்பவன் அவரைக் கொலை செய்ய முயற்சித்தான்.
1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பாட்டெல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
1854 – கேன்சஸ், நெப்ராஸ்கா ஆகியன ஐக்கிய அமெரிக்காவின் பண்டலங்கள் ஆகின.
1876 – உதுமானிய சுல்தான் அப்துலசீசு பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அவரது மருமகன் ஐந்தாம் முராத் சுல்தானானார்.
1883 – நியூயோர்க் நகரில் புரூக்ளின் பாலம் இடிந்து விழப்போவதாக எழுந்த வதந்தியை அடுத்து இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 12 பேர் இறந்தனர்.
1913 – லண்டன் உடன்பாடு எட்டப்பட்டு முதலாம் பால்கன் போர் முடிவுக்கு வந்தது. அல்பேனியா தனி நாடாகியது.
1914 – அக்காலத்தின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் அக்குவித்தானியா தனது முதல் பயணத்தி இங்கிலாந்து, லிவர்பூலில் இருந்து நியூயார்க் நகரம் நோக்கி ஆரம்பித்தது.
1925 – மே 30 இயக்கம்: சாங்காய் காவல்துறை கிளர்ச்சியில் ஈடுபட்ட 13 தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்றது.
1942 – இரண்டாம் உலகப் போர்: 1000 பிரித்தானியப் போர் விமானங்கள் செருமனியின் கோல்ன் நகரில் 90-நிமிடங்கள் குண்டுமாரி பொழிந்தன.
1958 – இலங்கை இனக்கலவரம், 1958: இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.[2]
1961 – நீண்ட காலம் டொமினிக்கன் குடியரசை ஆண்ட ரஃபாயெல் துருயீலோ சாந்தோ தொமிங்கோ நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
1967 – நைஜீரியாவின் கிழக்குப் பகுதி பயாஃப்ரா குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது.
1968 – பிரான்சியத் தளபதி சார்லஸ் டி கோல் பிரான்சிய தேசியப் பேரவையைக் கலைத்தார். அவரது ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆதரவாளர்கள் பாரிசு நகரில் கூடினர்.
1971 – மரைனர் திட்டம்: செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.
1972 – இசுரேலின் லொட் விமானநிலையத்தில் ஜப்பானிய செம்படை தாக்குதல் மேற்கொண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர், 78 பேர் காயமடைந்தனர்.
1974 – ஏர்பஸ் ஏ300 பயணிகள் வானூர்தி முதலாவது சேவையை ஆரம்பித்தது.
1975 – ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1982 – பனிப்போர்: எசுப்பானியா நேட்டோ அமைப்பில் இணைந்தது.
1987 – கோவா இந்தியாவின் தனி மாநிலமாகியது.
1998 – வடக்கு ஆப்கானித்தானில் தக்கார் மாகாணத்தில் 6.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
1998 – பாக்கித்தான் கரான் பாலைவனத்தில் அணுகுண்டு சோதனையை மேற்கொண்டது.
2003 – மியான்மரில் எதிர்க்கடி ஆதரவாளர்கள் 70 பேர் வரை அரசுப் படைகளினால் கொல்லப்பட்டனர். ஆங் சான் சூச்சி இவ்விடத்தை விட்டு வெளியேறினாலும், பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.
2012 – லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்லசு டெய்லருக்கு சியேரா லியோனியின் உள்நாட்டுப் போரில் நிகழ்த்திய குற்றங்களுக்காக 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2013 – நைஜீரியாவில் ஒருபால் திருமணம் தடை செய்யப்பட்டது.

பிறப்புகள்

1423 – ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1461)
1814 – மிகைல் பக்கூனின், உருசிய மெய்யியலாளர் (இ. 1876)
1903 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் (இ. 1973)
1931 – சுந்தர ராமசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 2005)
1934 – அலெக்சி லியோனொவ், சோவியத்-உருசிய விண்வெளி வீரர் (இ. 2019)
1940 – ஜக்மோகன் டால்மியா, இந்தியத் துடுப்பாட்ட நிருவாகி (இ. 2015)
1947 – வி. நாராயணசாமி, இந்திய அரசியல்வாதி, புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் முதலமைச்சர்
1958 – கே. எஸ். ரவிகுமார், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், நடிகர்
1975 – மாரிசா மேயர், அமெரிக்கக் கணினி அறிவியலாளர், தொழிலதிபர்

இறப்புகள்

1431 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சியப் புனிதர் (பி. 1412)
1593 – கிறித்தோபர் மார்லொவ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1564)
1606 – குரு அர்ஜன், சீக்கிய குரு (பி. 1563)
1640 – பீட்டர் பவுல் ரூபென்ஸ், செருமானிய-பெல்ஜிய ஓவியர் (பி. 1577)
1778 – வோல்ட்டயர், பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1694)
1912 – வில்பர் ரைட், அமெரிக்க விமானி, தொழிலதிபர் (பி. 1867)
1929 – பாம்பன் சுவாமிகள், தமிழகப் புலவர் (பி. 1850)
1949 – இகோர் பெல்கோவிச், உருசிய வானியலாளர் (பி. 1904)
1955 – என். எம். ஜோசி, இந்தியத் தொழிற்சங்கத் தலைவர் (பி. 1875)
1960 – போரிஸ் பாஸ்ரர்நாக், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1890)
1981 – பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், தென்னிந்திய மிருதங்கக் கலைஞர் (பி. 1912)
1995 – டெட் டிரேக், ஆங்கிலேயக் காற்பந்து வீரர் (பி. 1912)
2011 – ரோசலின் யாலோ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (பி. 1921)
2013 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை மருத்துவர், அரசியல்வாதி (பி. 1953)

சிறப்பு நாள்

புரட்சி நாள் (அங்கியுலா)
இந்தியர்களின் வருகை (டிரினிடாட் மற்றும் டொபாகோ)
அன்னையர் நாள் (நிக்கராகுவா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!