‘அடிமாட்டு விலைக்கு பேரம்’ பரிதாப நிலையில் புஷ்பா 2..! | உமாகாந்தன்

 ‘அடிமாட்டு விலைக்கு பேரம்’ பரிதாப நிலையில் புஷ்பா 2..! | உமாகாந்தன்

பாலிவுட் படங்களை பார்க்கவே ரசிகர்கள் தயாராக இல்லாத நிலையில் தெலுங்கு திரையுலகம் இந்த ஆண்டு மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா 2 படத்தின் பட்ஜெட் 500 கோடி ரூபாயை தாண்டிய நிலையில், அந்தப் படத்தை அதிக விலைக்கு விற்க படக்குழு நினைத்துக் கொண்டிருக்க அதற்கு மாறாக விநியோகஸ்தர்கள் தற்போது அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் சமந்தாவின் குத்தாட்டம் காரணமாக ஹிந்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி ஹிட் அடித்தது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் 250 கோடி வசூல் வேட்டையை நடத்தியது.

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் 2 படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தாண்டிய நிலையில், புஷ்பா 2 படத்துக்காக 500 கோடி ரூபாய் வரை பட்ஜெட்டை படக்குழு இறக்கி இருக்கிறது.

ஆனால் திடீரென தற்போது சினிமா பார்க்கும் ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக குறைந்துவிட்டது ஒட்டுமொத்த திரை உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெரிய பட்ஜெட் படங்களுக்கும் ரசிகர்கள் வர தயங்கி வரும் நிலையில், புஷ்பா 2 படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க தயாராக இல்லை என்கிற பேச்சுக்கள் டோலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹிந்தி பெல்ட்டில் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்கு உரிமையை அதிக தொகைக்கு விற்பனை செய்ய புஷ்பா 2 படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், பெரிய தொகைக்கு படத்தை வாங்க முடியாது என விநியோகஸ்தர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா 2 படம் குறித்து இதுவரை வெளியான எந்த ஒரு க்ளிம்ப்ஸ் வீடியோவும் ரசிகர்களை பொதுவாக ஜெனரல் ஆடியன்ஸை கவராத நிலையில், அந்த படம் வெளியானால் அதிகபட்சமாக 500 முதல் 600 கோடி வசூல் செய்வதே கடினம் தான் என கூறுகின்றனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...