வரலாற்றில் இன்று ( 27.05.2024)

 வரலாற்றில் இன்று ( 27.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 27 கிரிகோரியன் ஆண்டின் 147 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 148 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 218 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர்.[1]
1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார்.
1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார்.
1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார்.
1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன.
1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் படைகள் கனடாவில் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றின.
1837 – இலங்கையில் கொழும்பு நகரில் வெள்ளப்பெருக்கினால் 2000 வரையான வீடுகள் நீரில் மூழ்கின, பாலங்கள் பல சேதமடைந்தன.[2]
1860 – இத்தாலியின் ஒற்றுமைக்காக கரிபால்டி சிசிலியின் பலேர்மோ நகரில் தாக்குதலை ஆரம்பித்தார்.
1883 – மூன்றாம் அலெக்சாந்தர் உருசியப் பேரரசராக முடி சூடினார்.
1896 – அமெரிக்காவின் மிசூரி, சென் லூயிசு, இலினொய் ஆகிய இடங்களில் சுழல் காற்று வீசியதில் 255 பேர் உயிரிழந்தனர்.
1930 – உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் டன்கேர்க் என்ற இடத்தில் செருமனியிடம் சரணடைந்த ஐக்கிய இராச்சியத்தின் நோர்போக் பிரிவைச் சேர்ந்த 99 பேரில் 97 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் “காலவரையறையற்ற தேசிய அவசரகால நிலையைப்” பிறப்பித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின்யின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அத்திலாந்திக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: யூத இனவழிப்பின் முக்கிய அதிகாரி ரைன்கார்ட் ஏட்ரிச் பிராகா நகர சமரில் காயமடைந்தார். எட்டு நாட்களின் பின்னர் இவர் இறந்தார்.
1958 – இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.[3]
1958 – இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கை முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.[3]
1958 – எப்-4 பன்டெம் II இன் முதலாவது பரப்பு இடம்பெற்றது.
1960 – துருக்கியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் செலால் பயார் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1965 – வியட்நாம் போர்: அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் வியட்நாம் மீது குண்டுகள் வீசித் தாக்குதலைத் தொடுத்தன.
1967 – ஆத்திரேலியாவில் நடந்த பொது வாக்கெடுப்பில் பழங்குடிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
1971 – மேற்கு செருமனியில் நடந்த தொடருந்து விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.
1971 – கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.
1975 – இங்கிலாந்தில் டிபில்சு பாலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர்.
1980 – தென் கொரிய இராணுவம் குவாங்சு நகரை குடிப்படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியது. 207 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – சோவியத் அதிருப்தியாளர் அலெக்சாந்தர் சொல்செனித்சின் 20 ஆண்டுகளின் பின்னர் உருசியா திரும்பினார்.
1996 – உருசிய அரசுத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் செச்சினியக் கிளர்ச்சியாளர்களை]] முதல் தடவையாக சந்தித்து போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
1997 – முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2001 – இசுலாமியப் பிரிவினைவாதக் குழு அபு சயாப் போராளிகள் பிலிப்பீன்சு, பலவான் நகரில் 20 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தனர். இப்பிரச்சனை 2002 சூன் மாதத்திலேயே தீர்த்து வைக்கப்பட்டது.
2006 – இந்தோனேசியாவின் சாவகத் தீவில் நிகழ்ந்த 6.4 அளவு நிலநடுக்கத்தில் 5.700 பேர் வரை உயிரிழந்தனர், 37,000 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1332 – இப்னு கல்தூன், துனீசிய வரலாற்றாளர், இறையியலாளர் (இ. 1406)
1761 – தோமஸ் முன்ரோ, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ அதிகாரி, சென்னை மாகாண ஆளுநர் (இ. 1827)
1897 – ஜான் கொக்ரொஃப்ட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1967)
1907 – ரேச்சேல் கார்சன், அமெரிக்க உயிரியலாளர், நூலாசிரியர் (இ. 1964)
1909 – டபிள்யு. டபிள்யு. ஹேன்சன், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1949)
1916 – ச. ராஜாபாதர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பொதுவுடைமைவாதி (இ. 1986)
1923 – ஹென்றி கிசிஞ்சர், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க அரசியல்வாதி
1928 – பிபன் சந்திரா, இந்திய அரசியல், பொருளாதார வரலாற்று அறிஞர் (இ. 2014)
1931 – ஓ. என். வி. குறுப்பு, மலையாளக் கவிஞர், திரைப்படப் பாடலாசிரியர் (இ. 2016)
1935 – தினேசு கோசுவாமி, இந்திய அரசியல்வாதி (இ. 1991)
1938 – பாலச்சந்திர நெமதே, மராட்டியப் புதின ஆசிரியர், கவிஞர், கல்வியாளர்
1954 – லோரன்சு எம். குரோசு, கனடிய-அமெரிக்க இயற்பியல் கோட்பாட்டாளர், அண்டவியலாளர்
1957 – நிதின் கட்காரி, இந்திய அரசியல்வாதி
1960 – வினோதன் ஜோன், இலங்கை துடுப்பாட்ட வீரர்
1962 – ரவி சாஸ்திரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1975 – பெர்யால் ஓசல், துருக்கிய வானியற்பியலாளர், வானியலாளர்
1977 – மகேல ஜயவர்தன, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1564 – ஜான் கால்வின், பிரான்சிய இறையியலாளர், மதகுரு (பி. 1509)
1840 – நிக்கோலோ பாகானீனி, இத்தாலிய வயனின் இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1782)
1910 – ராபர்ட் கோக், நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவர் (பி. 1843)
1919 – கந்துகூரி வீரேசலிங்கம், இந்திய நூலாசிரியர், செயற்பாட்டாளர் (பி. 1848)
1964 – ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் (பி. 1889)
1981 – க. இரா. ஜமதக்னி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், மார்க்சிய சிந்தனையாளர், நூலாசிரியர் (பி. 1903)
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)
1998 – மினூ மசானி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி (பி. 1905)

சிறப்பு நாள்

சிறுவர் நாள் (நைஜீரியா)
அன்னையர் நாள் (பொலீவியா)
அடிமை ஒழிப்பு நாள் (குவாதலூப்பே, செயிண்ட்-பார்த்தலெமி, சென் மார்ட்டின்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...