வரலாற்றில் இன்று ( 26.05.2024)

 வரலாற்றில் இன்று ( 26.05.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மே 26  கிரிகோரியன் ஆண்டின் 146 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 147 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 219 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான்.
451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது.
946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார்.
961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான்.
1135 – அனைத்து எசுப்பானியாவின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ லியோன் பெருங்கோவிலில் முடிசூடினார்.
1293 – சப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 23,000 பேர் உயிரிழந்தனர்.[1]
1538 – பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த ஜான் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார்.
1637 – ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் என்ற அமெரிக்கப் பழங்குடிகளின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர்.
1770 – உதுமானியப் பேரரசுக்கு எதிரான ஒர்லோவ் கிளர்ச்சி கிரேக்கர்களுக்குப் பெரும் தோல்வியில் முடிவடைந்தது.
1805 – நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியின் அரசனாக மிலான் பேராலயத்தில் முடிசூடினான்.
1822 – நோர்வேயில் குரூ தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 116 பேர் உயிரிழந்தனர்.
1830 – அமெரிக்கப் பழங்குடி மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் இதனை சட்டமாக்கினார்.
1864 – மொன்ட்டானா அமெரிக்கப் பிராந்தியமாக இணைந்தது.
1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.
1896 – இரண்டாம் நிக்கலாசு உருசியாவின் கடைசிப் பேரரசனாக முடி சூடினார்.
1896 – டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீட்டின் முதல் பதிப்பு வெளியானது.
1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.[2]
1917 – அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் நிகழ்ந்த சூறாவளியின் தாக்கத்தினால் 101 பேர் உயிரிழந்து, 689 பேர் காயமடைந்தனர்.
1918 – ஜோர்ஜியா மக்களாட்சிக் குடியரசு அமைக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டைனமோ நடவடிக்கை: வடக்கு பிரான்சில், கூட்டு நாடுகளின் படையினர் பிரான்சின் டன்கிர்க் நகரில் இருந்து பெருந்தொகையானோரை வெளியேற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுப் படைகளின் சரணடைதலுடன் கலே முற்றுகை முடிவுக்கு வந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கசாலா சண்டை இடம்பெற்றது.
1958 – இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
1966 – பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1968 – ஐசுலாந்தில் சாலைப் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இடப் பக்க ஓட்டத்தில் இருந்து வலப் பக்கத்திற்கு மாறியது.[3]
1969 – அப்பல்லோ 10 விண்கலம் மனிதனை சந்திரனுக்கு அனுப்பும் தனது அடுத்த திட்டத்திற்கு தேவையான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து விட்டு பூமி திரும்பியது.
1970 – சோவியத் துப்போலெவ் டி.யு-144 மேக் 2 ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
1971 – வங்காளதேச விடுதலைப் போர்: பாக்கித்தான் இராணுவத்தினர் வங்காளதேசம், சில்கெட் பகுதியில் 71 இந்துக்களைப் படுகொலை செய்தனர்.
1972 – அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன், சோவியத் தலைவர் லியோனிது பிரெசுநேவ் ஆகியோர் கண்டந்தாவு ஏவுகணைத் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
1983 – சப்பான், வடக்கு ஒன்சூவைத் தாக்கிய 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஆழிப்பேரலையை உண்டு பண்ணியதால் 104 பேர் உயிரிழந்தனர்.
1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
1991 – தாய்லாந்தில் லவுடா வானூர்தி நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த அனைத்து 223 பேரும் உயிரிழந்தனர்.[4]
1998 – திருடப்பட்ட தலைமுறைகள்: ஆத்திரேலியப் பழங்குடிகளை முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள் என்ற பெயரில் ஆத்திரேலியாவில் நினைவுகூரப்பட்டது.
2002 – மார்ஸ் ஒடிசி விண்ணூர்தி செவ்வாய்க் கோளில் நீர்ப் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது.
2006 – ஜாவாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 5,700 பேர் உயிரிழந்து, 200,000 பேர் வீடுகளை இழந்தனர்.

பிறப்புகள்

1844 – மகா வைத்தியநாதையர், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1893)
1874 – புனித சியன்னா நகர கத்ரீனம்மாளின் லாரா, கொலொம்பிய கத்தோலிக்க அருட்சகோதரி, புனிதர் (இ. 1949)
1907 – ஜான் வெயின், அமெரிக்க நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1979)
1928 – சுகுமார் அழீக்கோடு, மலையாள எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 2012)
1937 – மனோரமா, தமிழகத் திரைப்பட, நாடக நடிகை, பாடகி (இ. 2015)
1944 – அந்தனி ஜீவா, இலங்கை மலையக எழுத்தாளர்
1945 – விலாஸ்ராவ் தேஷ்முக், மகாராட்டிராவின் 17வது முதலமைச்சர் (இ. 2012)
1949 – வார்டு கன்னிங்காம், விக்கியை வடிவமைத்த அமெரிக்கக் கணினியியலாளர்
1951 – சாலி றைட், அமெரிக்க இயற்பியலாளர், விண்வெளி வீராங்கனை (இ. 2012)
1979 – அமந்தா பாவுவேர், அமெரிக்க வானியலாளர்

இறப்புகள்

735 – பீட், ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672)
1703 – சாமுவேல் பெப்பீசு, ஆங்கிலேய அரசியல்வாதி (பி. 1633)
1908 – மிர்சா குலாம் அகமது, இந்திய இசுலாமியத் தலைவர், அகமதியா இயக்கத்தை ஆரம்பித்தவர் (பி. 1835)
1934 – செண்பகராமன் பிள்ளை, தமிழக-இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1891)
1967 – மா. இராசமாணிக்கனார், தமிழகத் தமிழறிஞர், வரலாற்றாசிரியர் (பி. 1907)
1978 – ஜெகசிற்பியன், தமிழக எழுத்தாளர் (பி. 1925)
1979 – எஸ். எம். சுப்பையா நாயுடு, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1914)
1989 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர், மொழியியலாளர் (பி. 1907)
1999 – நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர் கணினி அறிஞர், எழுத்தாளர்
2004 – நிகோலாய் சுதெபனோவிச் செர்னிக், உருசிய வானியலாளர் (பி. 1931)
2014 – ஜெயலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகி, திரைப்படப் பின்னணிப் பாடகி (பி. 1932)

சிறப்பு நாள்


விடுதலை நாள் (சியார்சியா)
விடுதலை நாள் (கயானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
அன்னையர் நாள் (போலந்து)
தேசிய மன்னிப்பு நாள் (ஆத்திரேலியா)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...