‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..
‘42 சதவிகிதம்’ கட்டண உயர்வு.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடியால்’ வாடிக்கையாளர்கள் ‘அதிர்ச்சி’..
வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் அழைப்புகள் மற்றும் டேட்டா கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் நிதி நெருக்கடியால் மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டி இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான மொபைல் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை முன்பு இருந்ததை விட 42 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள், 28 நாட்கள், 84 நாட்கள், 365 நாட்கள் வேலிடிட்டி ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம், இந்த புதிய கட்டண உயர்வு டிசம்பர் 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி ரூ.49க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு ரூ.38 டாக் டைம், ரூ.79க்கு ரீசார்ஜ் செய்தால் 28 நாட்களுக்கு ரூ.64 டாக்டைம் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிடட் பேக்குகளில் ரூ.149, ரூ.249, ரூ.299, ரூ.399 ஆகிய விலைகளிலும், 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிடட் பேக்குகளில் ரூ.379, ரூ.599, ரூ.699 ஆகிய விலைகளிலும், ஒரு ஆண்டுக்கான வேலிடிட்டி கொண்ட அன்லிமிடட் பேக்குகளில் ரூ.1499, ரூ.2399 ஆகிய விலைகளிலும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.