வரலாற்றில் இன்று ( 26.04.2024 )

 வரலாற்றில் இன்று ( 26.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டின் 116 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 117 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 249 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை).
1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர்.
1721 – ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார்.
1803 – பெருமளவு விண்வீழ்கற்கள் பிரான்சின் லாயிகில் நகரில் வீழ்ந்தன.
1805 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் லிபியாவின் டேர்னா நகரைக் கைப்பற்றினர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோசப் ஜோன்ஸ்டன் தலைமையில் கூட்டமைப்புப் படையினர் வட கரொலைனாவின் டேரம் நகரில் கூட்டணியினரிடம் சரணடைந்தனர்.
1865 – அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றனர்.
1867 – கொழும்பிலிருந்து கண்டி வரையிலான முதலாவது தொடர்வண்டி சேவை நடத்தப்பட்டது.[1]
1903 – அத்லெடிகோ மாட்ரிட் கால்பந்து கூட்டமைப்பு அணி உருவானது.
1923 – யோர்க் இளவரசர் எலிசபெத் போவ்சு லியோனைத் திருமணம் புரிந்தார்.
1937 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: எசுப்பானியாவில், கேர்னிக்கா நகரம் நாட்சிகளின் வான்படையினரின் குண்டுத் தாக்குதலுக்குள்ளானது.
1942 – மஞ்சுகோ நகரில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 1549 சீன சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1943 – சுவீடன், உப்சாலா நகரில் உயிர்ப்பு ஞாயிறுக் கலவரம் ஆரம்பமானது.
1944 – ஜியார்ஜியோசு பப்பாந்திரேயு எகிப்தில் இருந்து நாடு கடந்த நிலையில் தன்னை கிரேக்கத்தின் அரசுத்தலைவராக அறிவித்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் கடைசி வெற்றிகரமான தாக்குதல் போட்சன் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
1954 – இந்தோசீனா, மற்றும் கொரியாவில் அமைதியைக் கொண்டுவரும் முகமாக ஜெனீவாவில் அமைதிப்பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1960 – ஏப்ரல் புரட்சியை அடுத்து தென்கொரியாவின் அரசுத்தலைவர் சிங்மான் ரீ 12 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் பதவி விலகினார்.
1962 – நாசாவின் ரேஞ்சர் 4 என்ற ஆளில்லா விண்கலம் சந்திரனில் மோதியது.
1963 – லிபியாவில் அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1964 – தங்கனீக்கா, சன்சிபார் இரண்டு நாடுகளும் இணைக்கப்பட்டு தான்சானியா என ஒரு நாடாகியது.
1966 – தாஷ்கந்து நகரில் 5.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1981 – உலகில் முதல் தடவையாக திறந்த கருப்பை அறுவை சிகிச்சை அமெரிக்காவில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
1981 – ஈழப்போர்: மட்டக்களப்பில் பட்டித்திடலில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 16 தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1982 – தென் கொரியாவில் முன்னாள் காவல்துறையினன் ஒருவன் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியதில் 57 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1986 – சோவியத் ஒன்றியம், உக்ரைனில் செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டது. உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்து இதுவாகும்.
1989 – உலக வரலாற்றில் மிகப் பயங்கரமான சுழல் காற்று வங்காளதேசத்தின் நடுப்பகுதியைத் தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், 12,000 பேர் காயமடைந்தனர், 80,000 வீடுகளை இழந்தனர்.
1994 – சப்பானில் சீன விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 271 பேரில் 264 பேர் உயிரிழந்தனர்.
2005 – 29-ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்புக்குப் பின்னர் சிரியா தனது 14,000 இராணுவத்தினரை லெபனானில் இருந்து முற்றாக விலக்கிக் கொண்டது.

பிறப்புகள்

1711 – டேவிடு யூம், இசுக்காட்லாந்து மெய்யியலாளர், பொருளியலாளர், வரலாற்றாளர் (இ. 1776)
1762 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1827)
1785 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்கப் பறவையியலாளர், ஓவியர் (இ. 1851)
1888 – ஐ. எக்ஸ். பெரைரா, இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1951)
1888 – அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் மீகைலோவ், உருசிய வானியலாளர் (இ. 1983)
1889 – லுட்விக் விட்கென்ஸ்டைன், யூத ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1951)
1900 – சார்லஸ் ரிக்டர், அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1985)
1906 – ஜி. பட்டு ஐயர், திரைப்பட நடிகர், இயக்குநர்
1912 – தி. க. சண்முகம், தமிழக நாடக, திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 1973)
1914 – ஆர். சுதர்சனம், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1991)
1917 – ஐ. எம். பேய், சீன-அமெரிக்க கட்டிடக்கலைஞர்
1938 – நீல பத்மநாபன், தமிழக எழுத்தாளர்
1965 – கெவின் ஜேம்ஸ், அமெரிக்க நடிகர்
1967 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (இ. 2012)
1970 – சரண்யா பொன்வண்ணன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1970 – மெலனியா திரம்ப், அமெரிக்காவின் முதல் பெண், அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் மனைவி
1973 – சமுத்திரக்கனி, தமிழகத் திரைப்பட இயக்குநர்

இறப்புகள்

680 – முதலாம் முஆவியா, உமையா கலிபா (பி. 602)
1865 – ஜான் வில்க்ஸ் பூத், ஆபிரகாம் லிங்கனைக் கொலை செய்த அமெரிக்க நடிகர் (பி. 1838)
1897 – பெ. சுந்தரம் பிள்ளை, மனோன்மணீயம் என்ற நாடக நூலைப் படைத்த தமிழறிஞர் (பி. 1855)
1920 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1887)
1961 – ஹரி சிங், இந்தியாவின் சம்மு காசுமீர் சுதேச சமத்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (பி. 1895)

சிறப்பு நாள்

செர்னோபில் விபத்து நினைவு நாள் (உருசியா, பெலருஸ்)
இணைவு நாள் (தான்சானியா)
அறிவுசார் சொத்துரிமை நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...