வரலாற்றில் இன்று ( 20.04.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டின் 110 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 111 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 255 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார்.
1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.
1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம் அளிக்கப்பட்டது.
1689 – பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார்.
1770 – ஜோர்ஜிய மன்னர் இரண்டாம் எரிக்கிலி உதுமானியப் படைகளை ஆசுபின்சா போரில் தோற்கடித்தார்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பொஸ்டன் நகரைக் கைப்பற்றும் போர் ஆரம்பமானது.
1792 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: பிரான்சு அங்கேரி, பொகிமியா மன்னர் மீது போர் தொடுத்தது.
1810 – வெனிசுவேலாவின் கரகஸ் ஆளுநர் எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தார்.
1862 – லூயி பாஸ்ச்சர், கிளவுட் பெர்னாட் ஆகியோர் தன்னிச்சைப் பிறப்பாக்கம் என்ற கொள்கையை நிராகரிக்கும் பரிசோதனைகளை செய்து முடித்தனர்.
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கத் தலைவர் வில்லியம் மெக்கின்லி எசுப்பானியா மீது போரை அறிவிக்கும் அறிவித்தலுக்கு ஒப்புதல் அளித்தார்.
1902 – பியேர், மேரி கியூரி ஆகியோர் இரேடியம் குளோரைடைத் தூய்மைப்படுத்தினர்.
1914 – ஐக்கிய அமெரிக்காவில் கொலராடோவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது காவல்துறையினர் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டனர்.
1922 – சோவியத் அரசு தெற்கு ஒசேத்திய தன்னாட்சி வட்டாரத்தை ஜோர்ஜிய சோவியத் சோசலிசக் குடியரசில் அமைத்தது.
1939 – இட்லரின் 50வது பிறந்தநாள் செருமனியில் தேசிய விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது.
1945 – வடக்கு செருமனியில் நியூரென்காம் வதை முகாமில் மருத்துவப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 20 யூத சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் செருமனியின் லைப்சிக் நகரைக் கைப்பற்றினர். ஆனாலும் அடுத்த நாளே இதனை சோவியத் ஒன்றியத்துக்குக் கையளித்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் லைப்சிக் நகர முதல்வர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.
1945 – இட்லர் கடைசித் தடவையாக தனது சுரங்க பதுங்கு இருப்பிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
1946 – உலக நாடுகள் சங்கம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு, அதன் பெரும்பாலான அதிகாரங்கள் ஐக்கிய நாடுகள் அவைக்கு வழங்கப்பட்டன.
1961 – பனிப்போர்: கியூபாவில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பன்றிகள் விரிகுடா படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
1967 – சைப்பிரசில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 126 பேர் உயிரிழந்தனர்.
1968 – தென்னாபிரிக்க விமானம் ஒன்று தென்மேற்கு ஆபிரிக்காவில் வீழ்ந்ததில் 122 பேர் உயிரிழந்தனர்.
1972 – அப்பல்லோ திட்டம்: யோன் யங் தலைமையில் சென்ற அப்பல்லோ 16 விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது.
1978 – தென் கொரியப் பயணிகள் விமானம் சோவியத் ஒன்றியத்தினால் சுடப்பட்டதில் இரு பயணிகள் கொல்லப்பட்டனர். 107 பேர் தப்பினர்.
1998 – கொலம்பியாவில் பொகோட்டா நகரில் ஏர் பிரான்சு போயிங் விமானம் மலை ஒன்றுடன் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 53 பேரும் உயிரிழந்தனர்.
1998 – 28 ஆண்டுகள் இயங்கிய ஜெர்மனியின் சிவப்பு இராணுவ அமைப்பு என்ற தீவிரவாத அமைப்பு கலைக்கப்பட்டது.
1999 – அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் இடம்பெற்ற துப்பக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – அமெரிக்காவின் இயூஸ்டன் நகரில் உள்ள நாசாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் பணியாளி ஒருவன் பணயக் கைதி ஒருவரைக் கொன்று தன்னையும் சுட்டுக் கொன்றான்.
2012 – பாக்கித்தான், இஸ்லாமாபாத் நகரில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகில் குடிமனைகள் உள்ள பகுதியில் விமானம் வீழ்ந்ததில் 127 பேர் உயிரிழந்தனர்.
2013 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.6-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2015 – சோமாலியா, புந்துலாந்து பகுதியில் ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்.

பிறப்புகள்

1586 – லீமா நகர ரோஸ், பெரு புனிதர் (இ. 1617)
1808 – பிரான்சின் மூன்றாம் நெப்போலியன், பிரான்சின் 1வது அரசுத்தலைவர் (இ. 1873)
1889 – இட்லர், ஆத்திரிய-செருமானிய போர்வீரர், அரசியல்வாதி, செருமனியின் அரசுத்தலைவர் (இ. 1945)
1893 – ஹரோல்ட் லாயிட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (இ. 1971)
1904 – கே. சுப்பிரமணியம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் (இ. 1971)
1908 – பழனி சுப்பிரமணிய பிள்ளை, தமிழக மிருதங்க கலைஞர் (இ. 1962)
1910 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர் (இ. 2006)
1923 – சாரணபாசுகரன், தமிழகக் கவிஞர், இதழாளர் (இ. 1986)
1939 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர் (இ. 1997)
1939 – குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட், நோர்வேயின் 22வது பிரதமர்
1942 – இலந்தை சு. இராமசாமி, தமிழகக் கவிஞர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர்
1945 – தெய்ன் செய்ன், பர்மாவின் 8வது அரசுத்தலைவர்
1947 – அன்வர் இப்ராகீம், மலேசிய அரசியல்வாதி
1950 – நா. சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் 13வது முதலமைச்சர்
1972 – கார்மென் எலக்ட்ரா, அமெரிக்க நடிகை

இறப்புகள்

1248 – குயுக் கான், மங்கோலியப் [[ககான்|பேரரசர் (பி. 1206)
1786 – ஜான் குட்ரிக், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1764)
1918 – கார்ல் பெர்டினாண்ட் பிரவுன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1850)
1955 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், தமிழகக் கணிதவியலாளர் (பி. 1902)
1980 – ம. கனகரத்தினம், இலங்கை அரசியல்வாதி (பி. 1924)
2000 – பிலிப் சைல்ட்சு கீனான், அமெரிக்க வானியலாளர், கதிர்நிரலியலாளர் (பி. 1908)
2004 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1948)
2008 – மரியாம்பிள்ளை சேவியர் கருணாரத்தினம், இலங்கைத் தமிழ், கத்தோலிக்க மதகுரு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1951)
2011 – ர. சு. நல்லபெருமாள், தமிழக எழுத்தாளர்
2012 – சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1936)
2019 – எஸ். முத்தையா, இலங்கை-இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர் (பொ. 1930)

சிறப்பு நாள்

ஐநா சீன மொழி நாள் (ஐநா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!