எம்.ஆர் ராதா
மெட்ராஸ் ராஜகோபாலன் என்ற ரியல் நேம் கொண்ட எம்.ஆர் ராதா-வின் பர்த் டே டுடே
‘மக்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதையெல்லாம் எதிர்ப்பது தான் என் வேலை !’ என்று சொல்லி தீவிரமாக இயங்கியவர் அவர்.
அதிரடியாய், அநாயசயமாய் வந்த வசன வீச்சுக்களுக்காகவே அவரின் நாடகங்களுக்கு தடை விதிக்க ஒரு தனி சட்டத்தை அரசு கொண்டு வந்தது வரலாறு. வேறு எந்த கலைஞனுக்கும் இப்படி அரசாங்கம் அஞ்ச வில்லை என்பது வரலாறு.
இவரின் நாடகங்கள் புண் படுத்துகின்றன என்று சொன்னால் ,”மனம் புண்படுபவர்கள் நாடகம் பார்க்க வர வேண்டாம் !” என்று அறிவிப்புகள் தந்தார்.
நாடகத்தின் பொழுது வீசப்படும் சகலத்தையும் அடுத்த நாள் ,”பேடிகள் விட்டு சென்றவை !” என்று காட்சிக்கு வைப்பார்
எழுதப்படிக்க தெரியாது. பிறர் சொல்ல சொல்ல கேட்டே வசனங்களை மனப்பாடம் செய்வார்.
டைமிங் வசனங்கள் பேசுவது அவர் பாணி.
இம்பாலா கார் ஒன்றை வாங்கி அதில் தன் ,மகனைக்கூட ஏற விடாமல் அதை இங்கிருந்து வைக்கோலை கிராமத்துக்கு ஏற்றி அனுப்புகிற வேலைக்கு பயன்படுத்தி இருக்கிறார் ;ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒருமுறை பயன்பாட்டுக்கு அதை கேட்ட பொழுது என்னை ஏற்றிக்கொள்ளவே தகுதி இல்லாத கார் அது ;அதிலேன் அவர் ஏற வேண்டும் ?”முடியாது போ “என்றாராம்
எம்.ஜி.ஆர் உடன் நடந்த மோதலை பற்றி “நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியைவெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க. நானும் சாகலை… ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?” என்று தனக்கே உரிய எள்ளல் தொனியில் சொன்னார்.
திருப்பதி போய் தர்ம தரிசனம் கிடைக்காமல் மனிதர் கோயிலையே வெடிகுண்டு வைத்து தகர்க்க பயிற்சி செய்து கொண்டிருக்கும் பொழுதே அது வெடித்து ஒரு எண்பது பேர் காயமடைந்து விட போலீஸ் அதிகாரி நாடக முதலாளிக்கு தெரிந்த நபராக இருந்ததால் தப்பித்துக்கொண்ட பின் ,”சட்டம் எப்பவும் தூங்கிக்கொண்டு தான் இருக்கு ;அதை ரொம்ப தட்டி எழுப்பினால் மட்டும் தான் கொட்டாவி விட்டுக்கொண்டு எழும்பும் .”என்கிறார்
“என்ன ரகசியமோ ,எனக்கு தெரிஞ்சவரையில் இப்போ சினிமா ரகசியம் ஒரு சாண் துணியில் இருக்கு .அந்த துணியிலேயும் சென்ஸார் போர்ட் ன்னு ஒண்ணு இருந்து தொலையுதே அப்படின்னு இருக்கு !” என்று சென்சார் போர்ட் மீது முதன் முதலாக பாய்ந்த மனிதரிவர்.
காமராஜர் இவருக்கு புனித ஆடை போர்த்தும் நிகழ்வை செய்தார். “ஆடையில் என்ன புனிதம் இருக்கு ? போர்த்துபவர் புனிதர். அதனால் ஏற்றுக்கொள்கிறேன்.” என்றார்.
அண்ணா ஆட்சிக்கு வந்தால் இவர் தான் கலை அமைச்சர் என்றார்
என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் இவரை வில்லனை போடாமல் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்து கொண்டிருந்த விஷயம் தெரிந்து அவரே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னை சுடச் சொன்னார் ராதா .
மிகவும் புகழ்பெற்ற ஆச்சாரமான நீதிபதி ஒருவர் முன் இவரின் விதவையின் கண்ணீரை தடை செய்ய சொல்லி வழக்கு போன பொழுது இவரின் நாடகத்தை பார்த்து கண்ணீர் விட்டு ,”நீதான் அய்யா மார்க்கண்டேயன் !இப்படிப்பட்ட நல்ல கருத்துக்களை தொடர்ந்து நாடகத்தில் சொல்லு !” என்றார் .பின் பல வழக்குகளில் இருந்து வம்பு சண்டைக்காரர் ஆன இவரை அவர் காப்பாற்றவே அவரை தெய்வம் என சொல்லி கண்ணீர் விட்டார் எம்.ஆர்.ராதா
பெரியார்,அண்ணா,சம்பத் எல்லாரும் உன் நாடகத்தை பார்க்க வந்திருக்கிறார்கள் ;இடமில்லை என்ற பொழுது ,”அவர்களை தரையில் உட்கார்ந்து பார்க்க சொல் !”எனக்கம்பீரமாக சொன்னார் .பார்த்து விட்டு நூறு திராவிட இயக்க கூட்டம் போடுவதும் ,ஒரு எம்.ஆர்.ராதா நாடகம் போடுவதும் ஒன்றே !”என அண்ணாவின் புகழ் மாலை இவர்மீது வந்து சேர்ந்தது
மாணவர்கள் இவரைப்பார்க்க வந்தால் துரத்தி அடிப்பார். அவர்கள் சினிமா பார்க்க கூடாது என்று அழுத்தி சொல்வார். “எங்க வேலையை நாங்க பார்க்கிறோம் ;உங்க வேலையை நீங்க பாருங்க !” என்பது இவரின் வாதம்
உலக பாட்டாளிகளே ஒன்று படுங்கள் என நாடகங்களில் முதன்முதலில் போட்டது இவர் தான் .
போலீஸ் ஜீவனாந்ததை தேடிய பொழுது தன் நாடக அரங்கில் முதல் வரிசையில் மொட்டை அடித்து சந்தானம் பூசி,விபூதி இட்டு உட்கார வைத்திருக்கிறார் .நீங்கள் கம்யூனிஸ்ட்டா என்கிற கேள்விக்கு ,”இல்லாதவன் எல்லாருக்கும் அந்த சிந்தனை உண்டாவது இயல்பு தானே ?”எனக் கேட்கிறார் .அவரின் காதலுக்கும் இவரே தெரியாமல் கடிதத் தூது இவரே போயிருக்கிறார் .”என் வாழ்க்கை புரட்சி இதனால் விளைந்தது !”என ஜீவா குறும்பாக சொன்னாராம்
‘கலைஞன் ரசிகனுக்கு லஞ்சம் கொடுப்பவனாக இருக்க கூடாது .அறிவைக்கொடுப்பவனாக இருக்க வேண்டும் .” என்கிறார்
‘மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை’ என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!
தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்” என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்
அன்னாரின் ஹேப்பி பர்த் டே-க்கு ஒரு போக்கே பார்சலேய்
From The Desk of கட்டிங் கண்ணையா!