நோக்கியா மூடப்பட்ட இடத்தில் புதிய நிறுவனம் – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்
சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா நிறுவன இடத்தில், செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் புதிய நிறுவனம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சால்காம்ப் என்ற அந்த நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை துவக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், 10 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட இடத்தில் மற்றொரு செல்போன் உதிரிபாகம் நிறுவனம் உதயமாவதற்கு மாநில அரசின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
