நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
நாட்டு சேதியும் !!! நம்ம சேதியும்!!!
தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மூலமாக தேர்வு செய்வதற்கானஅவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
நீங்க நடத்துங்கய்யா… தமிழகத்தில நடக்கிற ஆட்சியே இன்னொரு கட்சியோட மறைமுக ஆட்சிதான்னு சொல்றாங்க…. நாங்க ஏதாவது கேட்டமா?!?!
************************************
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்துக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வந்து சென்ற பிறகு சிற்பக்கலையை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் தமிழக தொல்லியல்துறை ஈடுபட்டு வருகிறது._ அமைச்சர் கா பாண்டியராஜன்
உங்க ஆளு ஒருத்தர் என்னடான்னா பிரதமர் சொல்லிதான் தமிழ் மொழி தொன்மையான மொழி என்று நிரூபிக்கப்பட்டு இருக்குன்னு நாடாளுமன்றத்தில் உலறிக்கிட்டு இருக்காரு. நீங்க என்னன்னா பிரதமர் வந்துட்டு போன பிறகுதான் சிற்பக்கலையை மேம்படுத்த முயற்சி எடுத்து இருக்கோம்ன்னு சொல்றீங்க இதுக்கு பேசாம……..
************************************
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ரூபாய் 245 கோடியில் புதிய சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்.
நேத்து புதிய மருத்துவ கல்லூரி, இன்னைக்கு புதிய சிகிச்சை பிரிவுகள்….. இருக்கிறது எல்லாம் என்ன லட்சணத்தில இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்…. அது என்னங்க புதுசா தொடங்குறதில காட்டுற ஆர்வத்தை இருக்குறத சரி பண்றதுல காட்ட மாட்டேங்கறீங்க…. இதுலதான் வருமானம் அதிகமோ?!?!
************************************
சமூக வலைத்தள கணக்கை ஆதாருடன் இணைக்கும் திட்டம் இல்லை. மத்திய அரசு
ஏற்கனவே எல்லாமே உங்க பார்வையில தானங்க இருக்கு. உண்மையைச் சொல்லி ஒரு பதிவு கூட போட முடியல…..இதுல எதுக்கு புதுசா திட்டம் எல்லாம்?!?!
***************************************
ஒரே நாடு !!! ஒரே மொழி !!!! திட்டத்தை அமல்படுத்த திட்டம் இல்லை_ மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் -ஜி கிஷன் ரெட்டி.
அட!!! அமல்படுத்தி தான் பாருங்களேன்!!!!
****************************************
10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உயர்நீதிமன்றங்கள் விரைந்து தீர்வு காண வேண்டும்._ மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
எப்படிங்கய்யா ???பழைய வழக்கில இருந்து உங்களுக்கு வேண்டிய குற்றவாளிகள் எல்லாரையும் விடுதலை செஞ்து தானே…. பண்ணிட்டா போச்சு…
******************************************
நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் லாபகரமாக்கப்படும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
அத யாருக்கு விக்கப் போறீங்க?!?!
*******************************************