தந்தை யார்?

 தந்தை யார்?

தகப்பன் தன்னை வருத்தி தேடியது
தன் பிள்ளையின் அபிவிருத்தி.
தொல்லை தரும் பிள்ளைக்காக
தலைகுனிய நேரும் பிழைக்காக
மண் குடம் உடைக்க மடிந்திடும்-முன்
மகனை மகுடம் சூட்டி
மன்னனாக்கி மகிழ்ந்திருப்பான் வெற்றி விலாசமாகிட
வெற்றிடம் வசமாவான்-நீ மேடையேறி மகிழ்ந்திருக்க
பாடையேறி படுத்திருப்பான்-நீ பட்டாடை போட்டிருக்க
பன்னாடையிடம் பாடுபட்டிருப்பான்
அருமை மகனுக்காக
வலி தாங்கிய வழி கடந்து
பெருமிதத்தால் விழியோரம் வழியும் நீருக்காக வாழ்ந்து வந்தவன்
நீ நியமித்திடாத
உன் விளம்பர தூதுவன்-தன் சிறு வயது சேட்டைகளை
மறு வடிவில்
அருகிருந்து ஆனந்தப்படுபவன்
பார்த்திராத பரமன்
பாத்திரமாக பார் முன்
அருளும் ஆண்டவனை
அருகில் ஆண் மகனாய்
சிலை நிலை சிவனை-நேரில்
செயல் நிலை சிறந்தவனாய்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...