வரலாற்றில் இன்று (04.03.2024 )

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 4  கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

51 – பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
1152 – பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார்.
1275 – சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
1351 – சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
1461 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1493 – கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
1519 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
1591 – முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார்.[1]
1665 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1776 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்து, பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.
1789 – நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1790 – பிரான்சு 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
1791 – பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1791 – வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1804 – நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டில் (இன்றைய ஆத்திரேலியாவில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1810 – பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது..
1813 – நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
1837 – சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
1877 – பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
1882 – பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1890 – பிரித்தானியாவின் மிக நீளமான “போர்த் பாலம்” இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
1899 – குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1908 – அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1959 – ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
1960 – பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
1962 – கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
1966 – கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
1970 – பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
1976 – வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
1977 – உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.
1980 – தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985 – அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.
1986 – சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
1994 – கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
1996 – அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.
2001 – லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2006 – பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2009 – அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
2012 – கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1678 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 1741)
1769 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய இராணுவத் தலைவர் (இ. 1849)
1847 – கார்ல் பேயர், ஆத்திரிய வேதியியலாளர் (இ. 1904)
1854 – நேப்பியர் ஷா, ஆங்கிலேய வானிலையியலாளர் (இ. 1945)
1856 – தாருலதா தத், இந்தியக் கவிஞர் (இ. 1877)
1877 – கர்ரெட் மார்கன், ஆப்பிரிக்க-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1963)
1902 – நீ. வ. அந்தோனி, ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர் (இ. 1971)
1904 – ஜார்ஜ் காமாவ், உக்ரைனிய-அமெரிக்க இயற்பியலாளர், அண்டவியலாளர் (இ. 1968)
1924 – கு. கலியபெருமாள், தமிழக செயற்பாட்டாளர் (இ. 2007)
1935 – டியு குணசேகர, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி
1938 – அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் (இ. 2006)
1944 – மூ. அருணாச்சலம், தமிழக அரசியல்வாதி (இ. 2004)
1947 – தெ. நித்தியகீர்த்தி, ஈழத்து-ஆத்திரேலிய எழுத்தாளர் (இ. 2009)
1965 – பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன், ஆங்கிலேயத் திரைப்பட இயக்குநர்
1980 – கமலினி முகர்ஜி, இந்தியத் திரைப்பட நடிகை
1980 – ரோகன் போபண்ணா, இந்திய டென்னிசு வீரர்
1986 – மைக் கிரிகேர், பிரேசில்-அமெரிக்கத் தொலிழதிபர், இன்ஸ்டகிராமை அமைத்தவர்.

இறப்புகள்

1193 – சலாகுத்தீன், ஈராக்கிய-எகிப்திய சுல்தான் (பி. 1137)
1941 – லூட்விக் குயிட், நோபல் பரிசு பெற்ற செருமானிய செயற்பாட்டாளர் (பி. 1858)
1967 – சண்முக ராஜேஸ்வர சேதுபதி, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. 1909)
1978 – நீலகண்ட பிரம்மச்சாரி, இந்திய விடுதலைப் போராட்டச் செயற்பாட்டாளர் (பி. 1889)
2011 – அர்ஜுன் சிங், இந்திய அரசியல்வாதி (பி. 1930)
2011 – கிருஷ்ண பிரசாத் பட்டாராய், நேபாளத்தின் 29-வது பிரதமர் (பி. 1924)
2016 – பி. ஏ. சங்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1947)
2016 – பி. கே. நாயர், இந்தியத் திரைப்பட வரலாற்றாளர் (பி. 1933)

சிறப்பு நாள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (இந்தியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!