த​லை சிறந்த எழுத்தாளர் ஆன்மீக ​பேச்சாளர் இந்திரா​செளந்திரராஜன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    1997 ல் தொலைக்காட்சியில் அப்போது 7வது படித்துக் கொண்டிருக்கிறேன் யார் எழுத்தாளர் யாருடைய கதை என்றெல்லாம் தெரியாது.ஆனால் அந்த 
தொடரின் பி.ஜி.எம்தொடரின் ஆரம்பத்தில் மர்மதேசம் என்ற அமானுஷ்யம் கலந்த குரல்,அதை தொடர்ந்து குதிரையில் முண்டாசு கட்டிய யாரோ ஒருவர்,
தன் நீண்ட வாளின் மூலம் கொல்லும் காட்சி ஒவ்வொரு முறையும் இந்த காட்சியில் ஒரு நொடி கண்சிமிட்டி பின் பயத்தோடு ஒருவித பதட்டத்தோடும் 
கதையைப் பார்க்கத் தொடங்குவோம்.தேவதர்ஷினியின் முதல் தொடர் தைரியம் மிகுந்த பெண்ணாக நடித்திருப்பார் சேத்தனின் நடிப்பும்அபாரம்தான்!  
அந்த இரண்டு பெரிய கோலிகுண்டு கண்கள் அவர் உருட்டும்  போது எங்கே வெளியே வந்து விழுந்து விடுமோ என்ற பயம் நமக்குத் தெரியும்.  

அன்றைய தொலைக்காட்சியை மிகவும் ஆக்கிரமித்து இருந்தது இவருடைய மர்மதேசம் தொடர்தான்ஒருமுறை என்னுடைய தொடர் பற்றி ராணி புத்தகத்தின் எடிட்டர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோதுஅப்போது ராணியில் வெளிவந்த இந்திராசெளந்தராஜன் அய்யா அவர்களின் கதைப் பற்றிய பேச்சு வந்தது
அவருடைய கதை வெளிவரும் போது எல்லாம் அந்த மாதிரி இடங்கள் எங்கே இருக்கிறது என்று வாசகர்கள் நிறைய கடிதங்களிலும் போன் மூலமாகவும் 
கேட்பார்கள் என்று சொல்லியிருந்தார்.

என்னுடைய
 உயிரோவியம் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நான் அவரை அழைத்திருந்தேன்இலக்கியம் தொடர்பாக எழுதுவது சிறந்ததென்றாலும் கருத்து சொல்வதை விடுத்துசமுதாயம் தொடர்பான எழுத்துக்களை எழுதுங்கள் என்று எனக்கு அறிவுரை வழங்கினார் அன்று ! எழுத்திலும் பேச்சிலும் மிகச்சிறந்த 
ஆற்றல் பெற்றவர்தற்போது நடந்த க்ரைம் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் விழாவில் கூட இவரின் பேச்சை கேட்க நேர்ந்தது நிறைவைத் தந்தது.

கதையின் தொடக்கத்தில் நமது எதிர்ப்பார்வையும் ஆர்வத்தையும் இறுதிபக்கம் வரையில் வைத்திருப்பார்தசாவதாரத்தில் கமல் கடைசி காட்சியில் 
சொல்வதைப் போல இல்லையென்று எங்கே சொன்னேன் இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன் என்பார்அதேபோல் இருக்கா இல்லையா என்ற 
கேள்விக்குறியை (அது பேய் பற்றியதாகவும் சரிதெய்வீகம் பற்றியதாகவும் சரிநமக்குள் உண்டு செய்திடுவார்பள்ளி விடுமுறை நாட்களில் காம்பெளண்டு 
வீட்டில் பக்கத்து வீட்டு அண்ணன் எடுத்துவரும் பழைய புத்தகத்தில் பாதி பக்கம் கிழிந்து சில நேரம் சிதிலமடையாத அட்டையுடன் வரும் இவர்களின் 
புத்தகத்தைப் படிக்கும்போது அத்தனை பரவசம் இருக்கும்.

இவருடைய புதினங்கள் ஒவ்வொரு மாதமும் கிரைம் ஸ்டோரி மற்றும் இன்றைய கிரைம் நியூஸ் என்று வெளியிடப்பட்டுதான் வருகிறது இப்போதைய 
தொலைக்காட்சிகள்அவரின் கைவண்ணத்தில் தொலைக்காட்சிகள் வெளியிடப்பட்டது வைகளில் நான் அறிந்தவை

·       என் பெயர் ரங்கநாயகி

·       சிவமயம்
·       ருத்ர வீணை
·       விடாது கருப்பு
·       மர்ம தேசம் – ரகசியம்Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!