மீண்டும் உயிர்பலி பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியில் 15வயது சிறுமி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்பினார். பின்னர் வீட்டின் பின்புறம் காட்டுப் பகுதியில் இயற்கை உபாதைக்காக செல்ல சற்று நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டது. சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கலவரமடைந்து போக, ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் சிறுமியைப் பார்த்த பெற்றோர் அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோத்தித்த மருத்துவர்கள் அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

திருவெண்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் நடத்திய விசாரணையின் பேரில், பிற்பகம் 4 மணி அளவு சில இளைஞர்கள் சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினார்கள். ஆனால் விசாரணையில் அந்த இளைஞர்களுக்கும் அந்த பாலியல் கொடுமைக்கும் எந்த தொடர்பில்லை என்று தெரிய வந்தது. தீவிரமாக விசாரித்தபோது, சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 30 வயதான கல்யாணசுந்தரம் என்றவன் சிறுமியைத் தேடி சென்றபோது அந்தப் பகுதியில் இருந்து ஓடி வந்ததாகவும், அதன் பின்னர் தங்களுடன் சேர்ந்து சிறுமியை தேடியதாகவும் கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

திருமணம் ஆகாமல் தனிமையில் இருந்த கல்யாணசுந்தரம், சிறுமியை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்த திட்டமிட்டு இருந்ததாகவும், அதற்கான தகுந்த நேரத்தை எதிர்பார்த்து இருந்ததாகவும், தகுந்த நேரம் கிடைக்கவும், சிறுமி ஒப்புக்கொள்ளாததால் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வலி தாங்காமல் சிறுமி சத்தம் போடவே பயந்து போன, கல்யாணசுந்தரம் சிறுமியின் காலை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சுத்திணறி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். கிராம மக்கள் ஓடி வருவதைப் பார்த்து, காட்டுக்குள் இருந்து வெளியில் ஓடிவந்து தேடுவதைப் போல நடித்ததாக ஒப்புக் கொண்டான். கல்யாணசுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். கொலை செய்யப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!