கமல் சினிமாவுக்கு அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆகிறது. இதை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நேற்று, தனது சொந்த ஊரான பரமகுடியில் தந்தை டி.சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார் கமல் ஹாசன்.அந்த நிகழ்வில் சிறந்த நடிகர் என்றால் விரல் நீட்டும் இடத்தில் இருக்கும் நீங்கள் யாரை சிறந்த நடிகர் என்று குறிப்பிடுகிறீர்கள் எநன்று உலகநாயகனிடம் கேட்ட போது, அப்போது சிறந்த நடிகராக கமல் யாரை நினைக்கிறார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “தமிழில் ஒருவரல்ல, பலருக்கு திறமை இருக்கிறது. ஆனால் சற்று பறந்து விரிந்து சிந்தித்தால், மலையாளத்தைச் சேர்ந்த ஃபஹத் பாசில், இந்தியில் நவாசுதீன் சித்திக் மற்றும் ஷஷாங்க் அரோரா ஆகியோர் எனக்குப் பிடித்தவர்கள்” என்றார் கமல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்த நவாசுதீன் சித்திக்,ஷஷாங்க் அரோராவைப் பற்றிக் கூறும்போது, தனது ஐகான் மற்றும் வழிகாட்டியான நாகேஷை ஷஷாங்க் நினைவூட்டுவதாகவும், மிகச் சிறிய வயதிலேயே சிறந்த திறமைசாலியாக தன்னை நிரூபித்துள்ளார்.
