பாஜக சாயம் பூச பார்க்கிறார்கள் பாலசந்தர் சிலை திறப்புவிழாவில் பேசியது
ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் திரைப்படத்தின் முதல் மோஷன் போஸ்ட்டர் நேற்று வெளியானது. இந்த போஸ்டர் இந்தி, தெலுங்கும், மலையாளம் மற்றும் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று இயக்குநர் கே. பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் கமல், இயக்குநர் மணிரத்தினம், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட முக்கிய திரையுலகத்தினர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்
கமல் குறித்து நடிகர் ரஜினி பேசுகையில் “அரசியல் நோக்கி கமல் ஹாசன் பயணித்தாலும் கலையை அவர் ஒரு போதும் கைவிட மாட்டார் என்றார்
நடிகர் ரஜினி காந்த்க்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளார் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டதை மேற்கொண்டு பேசிய கமல் ஹாசன் “காலம் தாழ்த்தி விருதுகள் தரப்பட்டாலும் தகுதியானவர்களுக்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.
இருவரின் பேச்சுகளையும் ரசித்த கவிஞர் வைரமுத்து கற்கண்டு கட்டிகள் மோதிக் கொண்டால் சர்க்கரைதான் உதிரும் தனது பாணியில் முத்தாய்ப்பாக கூறினார்
திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்படுவது போல் எனக்கு பாஜக சாயம் பூச பார்க்கின்றார்கள். வள்ளுவரும் காவிக்குள் சிக்கமாட்டார். நானும் மாட்ட மாட்டேன் என நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்ற இந்த நேரத்தில் திருவள்ளவருக்கு காவி சாயம் பூசிவது தேவையற்றது என்றும் அவர் அறிவித்தார்.