கே.பி. ஸார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட டயலாக்ஸும், சிச்சுவேஷன் காமெடியும்தான்.
பாக்கியராஜ் சொன்னது
கே.பி. ஸார் இயக்கி நான் பார்த்த முதல் திரைப்படம் நீர்க்குமிழிதான். அந்தப் படத்தை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டு மறுபடியும் மனசு கேக்காம அடுத்த ஷோவுக்கும் ஓடிட்டேன்.. கே.பி. ஸார்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட டயலாக்ஸும், சிச்சுவேஷன் காமெடியும்தான்..
நீர்க்குமிழில நாகேஷ் சாகப் போறாருன்றதை அவர்கிட்ட சொல்லாம மறைமுகமா சொல்ற சீனை அவ்ளோ டச்சிங்கோட செஞ்சிருக்காரு டைரக்டர்.. எதிர் நீச்சல் படத்துல நாகேஷ் சாப்பிட்டிருக்க மாட்டார். யாராவது ஒருத்தராவது தன்னை சாப்பிட கூப்பிட மாட்டாங்களான்னு ஏக்கத்துல இருப்பார். அப்போ முத்துராமன்கிட்ட போய் ‘சேட்டன் நீங்க சாப்பிட்டீங்களா?’ன்னு மூணு தடவை கேட்பாரு.. முத்துராமனும் மூணு தடவையும் பதில் சொல்லிட்டு எரிச்சலாகி நிக்கும்போது, ‘நான் மூணு தடவை கேட்டனே சேட்டன்.. நீ பதிலுக்கு ஒரு தடவையாவது நீ சாப்பிட்டியா மாதுன்னு என்னைக் கேக்கலியே’ன்னு சொல்லுவாரு நாகேஷ்.. இந்த சென்டிமெண்ட் காட்சி எனக்கு ரொம்பப் பிடிச்சது.
அதே மாதிரி என்னையெல்லாம் தூக்கிச் சாப்பிடுற மாதிரி அவள் ஒரு தொடர்கதைல பர்ஸ்ட் நைட் சீன் ஒண்ணு வைச்சிருப்பாரு டைரக்டர்.. அதுல அந்தக் கட்டில் ஆடுற சத்தத்தை மட்டும்தான் காட்டிருப்பாரு.. முதல் தடவையா பார்க்கும்போது அந்தச் சத்தத்தோட அர்த்தம் வேற மாதிரி இருந்தது. ஆனால் இன்னொரு தடவை பார்க்கும்போதுதான் அதுல இருந்த ஒரு சென்டிமெண்ட்ஸ் புரிஞ்சது..
கே.பி. ஸார் இந்த வயசுலேயும் உழைக்கிறாருன்னா அது மிகப் பெரிய விஷயம்.. நான் ‘உத்தமபுத்திரன்’ ஷூட்டிங்ல இருந்தப்போ அவரோட புது நாடகத்தைப் பார்க்க வரும்படி அழைப்பு வந்திருந்துச்சு.. அதுக்காக ஷூட்டிங்கை அட்ஜஸ்ட் பண்ணி அவசரம், அவசரமா ஓடிப் போய் நாடகத்தைப் பார்த்தேன். பெர்பெக்ஷனா பண்ணியிருந்தாரு..
கே.பி. ஸார்கிட்ட இன்னொரு விஷயமும் இருக்கு.. அது அவர் படத்துல இருக்குற நகைச்சுவை. அவர் சீரியஸ் படமும் பண்ணியிருக்காரு.. நகைச்சுவை படமும் பண்ணியிருக்காரு.. ஆனால் எங்க டைரக்டருக்கு(பாரதிராஜாவுக்கு) நகைச்சுவைன்னா பிடிக்காது. தள்ளி வைச்சிருவாரு.. நான் ஒன்றரை பக்கத்துக்கு எழுதிக் கொடுத்தால்கூட அதை அப்படியே கிழிச்சிருவாரு.. நானும் இதுக்காக அவர்கிட்ட சண்டையெல்லாம் போட்டிருக்கேன். கமலுக்குக்கூட நல்லா தெரியும். ஆனா அவருக்கு அது செட்டாகலை. பட்… கே.பி. ஸாரின் இந்தத் திறமை ரொம்ப ஆச்சரியமானது. சீரியஸா படம் எடுக்கிறவரும், நகைச்சுவையா படம் எடுக்க முடியுதுன்னு அது இவராலதான்..” என்றார்..
இணையத்தில் இருந்து எடுத்தது