வாசிப்பு முக்கியம் பாஸ்!’
வாசிப்பு முக்கியம் பாஸ்!’ – வசந்தபாலன்
`இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை, கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது… அதுதான் புத்தக வாசிப்பு!’
– எமர்சன்
வாழ்க்கையின் மீதான பற்றுதல்களை புத்தகங்கள்தான் நமக்குத் தருகின்றன. புத்தகங்களை வாசிப்பதை அறிவுஜீவிகள் கொண்டாட்டமாகக் கருதுகின்றனர். வாழ்க்கையின் துயரங்களை, பிரச்னைகளை வாசிப்பதன் வழியாகக் கையாளுகின்றனர். வாழ்க்கையைப் படிப்பதன் வழியாகவும் எழுதுவதன் வழியாகவும் புதுமையை அடைந்துகொண்டே இருக்கின்றனர். அவர்களின் எல்லாமுமாகப் புத்தகங்களே இருக்கின்றன. புத்தகங்கள் வாசிப்பவர்களுக்குப் புதிய உலகங்களையும் தத்துவங்களையும் திறந்துகொண்டே இருக்கின்றன.
வாசிப்பின் அவசியம் பற்றி…
“அறிவு திறப்புக்கு புத்தகங்கள்தான் ஒரே சாய்ஸ். நண்பர்கள் இல்லாத நேரங்களில் புத்தகம் சிறந்த நண்பனாக இருக்கும். உலகத்தின் மிகச் சிறந்த போதை புத்தக வாசிப்பு மட்டும்தான். தனிமையான அறையில் அமர்ந்து அருமையான புத்தகத்தை வாசிக்கும்போது, உலகுக்கு நாமும் நமக்கு உலகமும் அறிமுகமாகிறது. மூன்று நாள்கள் இடைவிடாது நாவலை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்கள் அற்புதமானது.’’
நினைவுகளைப் புத்தகங்களோடும் படித்த வரிகளைச் சுட்டிக்காட்டி சிலாகித்தும் தொடர்ந்து பேசினார்…
“வார்த்தைகள் மனிதனுக்கு முக்கியமானவை. வார்த்தைகளைப் புத்தகங்கள் நமக்குத் தருகின்றன. தனித்திறமைகளைப் புத்தக வாசிப்பின் வழியேதான் வளர்த்துக்கொள்ள முடியும். வாழ்க்கையில் இந்த இடத்தில் நான் இருப்பதற்குப் புத்தகங்களே காரணம். புத்தகங்கள் இல்லாத வாழ்க்கை வெறுமையானது.’’
– வசந்தபாலன்
நன்றி: விகடன்