உயிரே போனாலும் கல்யாணம்தான்…
பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவை திருமணம் செய்தே தீருவேன், எத்தனை தடைகள் வந்தாலும், உயிரே போனாலும் சரி திருமணம் செய்வது உறுதி – ராமநாதபுரம் ஆட்சியரிடம் 73 வயது முதியவர் மலைச்சாமி மீண்டும் மனு
பி.வி.சிந்து சென்ற மாதம் பேட்மிண்டன் உலக சேம்பியன்ஷிப்பில் தங்க பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனையை படைத்தார். பல்வேறு தரப்பினரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மலைச்சாமி (75) என்னும் முதியவர் பி.வி.சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் நேற்று மனு அளித்துள்ளார்.
அவர் எங்கிருந்தாலும் தூக்கி வந்து திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் கோரிக்கையை கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் சிரிக்க தொடங்கிவிட்டனர்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்த மனுவில் அந்த முதியவர் தான் 2004-ஆம் ஆண்டு தான் பிறந்ததாகவும், அவருக்கு வெறும் 16 வயதே ஆவதாகவும் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் தீமைகளை அழிக்கவே இந்த முதியவர் அவதாரம் எடுத்துள்ளாராம். இவரது இந்த சுவாரஸ்யமான கோரிக்கை தற்போது வைரல் ஆகி வருகிறது.