காவலர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்

 காவலர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்

காவலர்கள் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்கள்.

 அவர்கள் பஸ்ஸில் பயணம் செய்தால், நடத்துனரிடம் வாரண்ட்டை கொடுத்து டிக்கட் எடுத்துக் கொள்ள வேண்டும். வாரண்ட் இல்லை எனில் தனது சொந்த பணத்தில் டிக்கட் எடுக்க வேண்டும். ஓசி பயணத்தை அனுமதிப்பதே ஒடத்துனர்கள் தான். இனி ஓசி பயணத்தை நடத்துனர் சங்கங்கள் தமிழகம் முழுவதும் தடை செய்ய வேண்டும். 

ஆயுத படையில் பணி செய்யும் போதே இவ்வளவு அராஜகம். இவர் லோக்கல் ஸ்டேஷனுக்கு மாறுதலாகி வந்தால், பொதுமக்களுக்கு கஷ்ட காலம் தான். எந்த ஒரு தனி மனிதரையும் அடிக்க போலீசுக்கு அதிகாரமில்லை. 

ஒரு அரசு ஊழியரை பணி செய்யும் போது கை நீட்டி அடிக்க இவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.   எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி.  இவர் மீது வழக்கு பதிந்து இவரை கைது செய்ய வேண்டும்.  பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடு போலீஸ்காரர் சம்பளத்திலிருந்து கொடுக்க வேண்டும்.

இச்சம்பவம் அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். ஆகவே பாதிக்கப்பட்ட நடத்துனர் மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு, வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...