ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி

 ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து அதிர்ச்சி

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்து  அதிர்ச்சி 


தொழிலதிபர் அனில் அம்பானி தனது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.


வங்கி அல்லாத நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் பொருளாதார மந்தநிலை மூலம் சுணங்கியுள்ளது. கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு திண்டாடி வந்த அந்த நிறுவனக்கு மூடு விழா நடத்தப்போவதாக அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி முடிவு செய்துள்ளார்.


ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், இதனைத் தெரிவித்திருக்கிறார்.

சென்ற ஜூன் மாதம் வெளியான கடந்த நிதி ஆண்டில் நான்காவது காலாண்டு முடிவுகளிலேயே இந்த நிறுவனத்தை அபாயம் சூழ்ந்திருப்பது தெரிந்துவிட்டது. அறிக்கையிலேயே தெளிவின்மை காணப்பட்டது.

ரிசர்வ் வங்கியிடம் கையேந்தும் மத்திய அரசு: ரூ.30 லட்சம் கோடி டிவிடெண்ட்?

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் தனது இரு உப நிறுவனங்கள் (Reliance MoneyReliance home finance) மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடனையும் வீட்டுக்கடனையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 15 சதவீதம் வருவாய் கிடைத்து வந்தது.

பைனான்ஸ் தவிர, சொத்து மேலாண்மை, பொது காப்பீடு ஆகிய தொழில்களையும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் மேற்கொள்கிறது. சொத்து மேலாண்மை நிறுவனமான ரிலையன்ஸ் நிப்பான் நிறுவனத்திடம் உள்ள சொத்துக்களை ஒரே காலாண்டில் கிட்டத்தட்ட 4 சதவீதம் வரைக் குறைந்துவிட்டது.

பொருளாதாரக் கொள்கை சரியில்லை: சுப்ரமணியன் சுவாமி விளாசல்

இதைப் பற்றி பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “நம் நிறுவனத்தின் உண்மையான மதிப்பு அங்கீகரிக்கபடவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

2008ஆம் ஆண்டு ஜனவரியில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் பங்குகள் உச்ச மதிப்பை எட்டியது. அதற்குப்பின் தனது 99 சதவீதம் மதிப்பை இழந்திருக்கிறது. திங்கட்கிழமை வர்த்தகத்தின் முடிவில் அதன் பங்குகள் 12.52 சதவீதம் சறுக்கி, ஒரு பங்கின் விலை வெறும் 24.45 ரூபாயில் முடிந்துள்ளது

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...