இது பெண்களுக்குக்கான விடயம் … (ஆண்களும் படிக்கலாம் தப்பு இல்லை )

இது பெண்களுக்குக்கான  விடயம் …  (ஆண்களும்  படிக்கலாம்  தப்பு இல்லை 

    

      விஞ்ஞானம்  வளர்ச்சியடைந்து ,  சிட்டுகுருவி  மைனா .போன்ற  உயிர்களை நாம் காவு கொடுக்க தொடங்கி நாட்கள் பலவாகி  விட்டது .தற்போது  பெண்களின்  அந்தரங்கம்  காவு போக  தொடங்கி உள்ளது .

    அதிர்ச்சியாகத்தான்  இருக்கும் ,ஆயினும் உண்மை அறிந்தால்  துடித்து  விடுவீர்கள் .கைபேசி  இல்லாத ஆண்களையும் ,பெண்களையும்  பார்ப்பது அரிது .

மனிதனின்  விஞ்ஞான வளர்ச்சியில்  கைபேசி  ஒரு மையில் கல்  என்றால் மறுக்க முடியாது .கைபேசியில்  பல  அப்பிளிகேஷன்  நம்மால் தரவிறக்கம் செய்யப்பட்டு  உபயோகபடுத்தப்படுகிறது .நமது  கைபேசியில்  இன்னொருவர்  தரவிறக்கம் செய்த  ஒரு  அப்ப்ளிகேஷன் நமக்கு தெரியாமல்  வேலை செய்து  நமது  அந்தரங்கங்களை கூவி விற்கிறது  என்பதுதான்  அதிர்ச்சி  தகவல் 

     ஸ்பை ஆப்  என்ற    அப்ளிகேஷன்   ஒரு சில ஆண்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு  பெண்களை  வேவு  பார்க்க ,  பெண்களின்  கைபேசியில் அவர்களுக்கு  தெரியாமல்  திணிக்கப்படுகிறது . ஸ்பை ஆப் (spy app ) கைபேசியில்  திணிக்கப்படுவது உங்கள் கைபேசி  அப்ளிகேஷன்ஸ்  பகுதியில் தெரியாது அப்படியோர் ஆப்  உங்கள் கைபேசியில் திணிக்கப்பட்டு உள்ளதா  என்பதை உங்களால கண்டுபிடிக்கவும்  முடியாது.தரவிறக்கம் செய்து  உங்கள் கைபேசியில்  திணித்தவரால்  மட்டும்தான்  அதை இயக்கவும் ,நீக்கவும்  முடியும் .

          ஸ்பை ஆப்  திணிக்கப்பட்ட கைபேசியில்  இருந்து செல்லும் அனைத்து தகவல்களும்   துல்லியமாக திணித்தவரால்  அறியப்படும் . .பெண்களை வேவு பார்க்க வைக்கும் இந்த ஆப்  பெண்களின் அனைத்து அந்தரங்களையும்  பரிமாறுகிறது .பெண்கள் உடைஉடுத்துவதில் இருந்து அனைத்து  விடயங்களும் வீடியோவாக  பதிவாகி   ஸ்பை அப்பை தரவிறக்கம் செய்து கைபேசியில்  திணித்தவருக்கு செல்கிறது .சில காதலர்கள்  தங்கள்  காதலியை  வேவு பார்க்க  இந்த ஆப்பை பயன்படுத்துகிறார்கள் .

    பெண்களே ..உங்கள்  கைபேசிக்கு  பாதுகாப்பு  குறியிடுகளை  வைத்து கொள்ளுங்கள் .கடவு சொல்லை  யார்க்கும் சொல்லாதீர்கள் .உங்கள் காதலனாக இருந்தாலும்  வேண்டாம் .அதுபோல  உங்கள்  மின்னஞ்சல் கடவு சொல்லும் யார்க்கும் தெரிய வேண்டாம் .உங்கள் மின் அஞ்சல்  மூலம்  உங்கள்   கைபேசியில்  ஸ்பை ஆப்பை செயல் புரிய வைக்கலாம் .பெரும்பாலானோர்மின்னஞ்சல் மூலம் ஸ்பை ஆப்பை  செயல்புரிய  வைக்கிறார்கள் ..

   நம்து  பாட்டியும்  தாத்தாவும்  மாமர நிழலில்  கயிற்று கட்டிலில் அமர்ந்து கொண்டு கள்ளம் இல்லாமல் பேசி மகிழ்ந்த  அந்த காலம்  மேல் என்று  எண்ண தோன்றுகிறது அல்லவா …கொடூராமானவன்  மனிதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!