சந்திரமுகி 2 சோபிக்கவில்லை…! திரைவிமர்சனம்! | தனுஜா ஜெயராமன்
சந்திரமுகி ஒன்றில் அடைத்து வைத்து வெளியே வந்த பேய் 17 வருசம் சும்மாவே இருந்திட்டு இப்ப வேலையை காட்ட ஆரம்பிச்சதாம்..
இதில் சந்திரமுகி பேய் மட்டுமில்ல வேட்டையன் பேய் வேற … எப்படி மிரட்டியிருக்ணும்.. ஆனா படத்தில் எந்த மிரட்டலும் , அலட்டலும் இல்லை.
ஆரம்பத்தில் பேய் பட குல வழக்கமாக ஒரு குடும்பம் கும்பலாக வந்து இந்த பேய் அரண்மனையில் தங்குது… உங்களுக்கு அரண்மனை படம் ஞாபகத்தில் வந்து போகலாம் மனோபாலாவை பார்த்த உடனே.
லாரன்ஸ் கண்ணில் மை வைத்த பேய் முகத்தை பார்த்தும் காஞ்சனா படங்களும் ஞாபகத்தில் வந்து போகலாம்..
படத்துல மூன்று நான்கு இளம் பெண்கள் இருந்தாலும் யார்மேல பேய் இறங்கிருக்குன்னு மொதல்லையே சொல்லிடுறாங்க.. நோ சஸ்பென்ஸ்.. சிருஷ்டி டாங்கே மகிமா எல்லாம் படத்தில் எதுக்குன்னு அவங்களுக்கும் தெரியலை நமக்கும் தெரியலை.
லஷ்மி மேன்னுக்கே இத்துனூண்டு தான் நடிக்க வாய்ப்பு. அது அவங்க தானான்னு பாக்கறதுக்குள்ள படத்தின் இன்ட்ரவல் வந்துடுது.
சந்திரமுகி படத்தில் ரஜினியின் கேரக்டர் ,நண்பர் ப்ரபு குடும்பத்துக்காக உயிரையும் கொடுப்பதாகவும், ஜோதிகாவை தங்கையை போல நினைப்பதாக தான் அழகாக வடிவமைக்கப் பட்டிருக்கும்.
ஆனா சந்திரமுகி 2 வில் லாரன்ஸ்க்கு எதிக்ஸ் எல்லாம் வேண்டாம்னு டைரக்டர் வாசு முடிவே பண்ணி விட்டார் போல..
நண்பன் காதலிக்கிறதா சொன்ன கங்கனா ராவத்திற்காக நண்பன் கதையவே முடிப்பார். கங்கனா வேறு ஒருத்தரை காதலிக்க அவர் கதையையும் முடிப்பார்.
கங்கனா ஹேர் ஸ்டைலை யார் செலக்ட் பண்ணாங்க தெரியலை கங்கனா வயதானவங்க மாதிரி தெரியறாங்க.. அவங்க லவ்வர் குணசேகரனோ அவங்க பையன் மாதிரியான தோற்றத்தில் தெரியறான். அவங்க மேக்கப் சரியில்லையா இல்ல அவங்களே வயசானங்களா என கடைசிவரை கண்டுபிடிக்க முடியலை.
திரைக்கதையோ காட்சியமைப்புகள் என பலவற்றிலும் சொதப்பல்கள். லாரன்ஸ் – வடிவேலு காமெடி என நினைத்து பண்ணுவது எதுவுமே மருந்துக்கும் ஒட்டவில்லை..
படத்தில் பல கேரக்டர்களுக்கும் நடிக்க துளியும் வாய்ப்பே இல்லை.
இசை மரகதமணி என்கிற கீரவாணி அருமையான ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர். ஆனால் படத்தின் இசையோ ஈர்க்கவில்லை. குறிப்பா சந்திரமுகியின் உயிர் நாடி பாடலான “ரா ரா” பாடலின் உல்டா இசை இம்சையாக இருக்கிறது. படத்தில் வேறு பாடல்களும் ரசிக்கும் ரகமாக இல்லை.. பின்னணி இசை கூட ஏற்கனவே கேட்டதாக இருக்க புதியதாக ஏதுமில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.
படக்குழுவினர் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்சியமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். சந்திரமுகி 2 சோபிக்கவேயில்லை. அவசர கோலத்தில் அள்ளி தெளித்த படம் போல தெரிகிறது.