ரிசர்வ் வங்கி விதித்த அபராதம்! | தனுஜா ஜெயராமன்
ரிசர்வ் வங்கி இந்தியாவில் அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை விதிமுறை மீறல், கணக்குகளை வங்கி விதிமுறைக்கு சரியாக இணங்குகிறதா, வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவையில் முறைகேடு ஏதும் நடக்கிறதா என்ற பல கோணத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பெடரல் வங்கி சில ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் அதிகப்படியான தொகையை அபராதமாக விதித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் ‘முன்பணம் மீதான வட்டி விகிதம்’ மற்றும் ‘வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை’ தொடர்பான சில விதிகளுக்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.72 லட்சம் அபராதமும், தனியார் துறை கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனமான பெடரல் வங்கி-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பெடரல் வங்கி தவிர, இதே ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் கொசமட்டம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி ரூ.13.38 லட்சம் அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகள், 2016 இன் சில விதிகளுக்கு இணங்காததற்காக மெர்சிடஸ் பென்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் மீது RBI ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.