ப்ரபல ஐடி நிறுவனத்தில் சைபர் தாக்குதலா? | தனுஜா ஜெயராமன்
இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் வெள்ளிக்கிழமை தனது அமெரிக்க பிரிவான இன்போசிஸ் மெக்காமிஷ் சிஸ்டம்ஸ்-ன் சைபர் செக்யூரிட்டி நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த சிக்கலைத் தீர்க்க சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து இன்போசிஸ் செயல்படுவதாகவும், இதே வேளையில் சிஸ்டம்ஸ் மற்றும் தரவுகளில் ஏற்பட்டு உள்ள தாக்குதல்களை கண்டறியவும், இந்த சைபர் செக்யூரிட்டி தாக்குதல் எங்கிருந்தது நடந்தது என்பதையும் தீவிரமான விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் மெக்கமிஷ் சிஸ்டம்ஸ் (ஐஎம்எஸ்) என்பது இன்ஃபோசிஸ் பிபிஎம் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். இது எந்தொரு கூட்டணியும் இல்லாமல் இன்ஃபோசிஸ் லிமிடெட்டின் முழு சொந்தமான துணை நிறுவனமாக அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.
இதன் விளைவாக இன்போசிஸ் நிறுவனத்தின் சில பயன்பாடுகள் மற்றும் அமைப்புகள் பயன்படுத்த முடியாமல் போனது குறிப்பிடத் தக்கது. இது குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த பாதிப்பு எவ்வளவு பெரியது என கணிக்க முடியவில்லை என்கிறார்கள். இது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.