பிக்பாஸில் வெளியேறுகிறாரா? “லவ் கேம்” புகழ் ஐஷூ! | தனுஜா ஜெயராமன்

 பிக்பாஸில் வெளியேறுகிறாரா? “லவ் கேம்” புகழ் ஐஷூ! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் விவரம் கசிந்துள்ளது. இதில் வெளியேறப் போவது யார்? தப்பிக்க போவது யார்? என விவாதங்கள் சூடு கிளம்பியுள்ளது.

வைல்டு கார்டு போட்டியாளர்களின் வருகையால் கடுப்பான பிக்பாஸ் போட்டியாளர்கள் அவர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்க முடிவு செய்து, 5 பேரையும் தேர்வு செய்து சின்ன பாஸ் வீட்டுக்கு அனுப்பினார்கள். மேலும் அவர்கள் 5 பேரையும் பிளான் போட்டு நாமினேட்டும் செய்தனர். அவர்கள் பதிலுக்கு பிக்பாஸ் வீட்டில் உள்ள மாயா, ஐஷூ, அக்‌ஷயா, மணி ஆகியோரை நாமினேட் செய்தனர்.

இதில் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் ஜோஸ்யங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது . அதன்படி காதல் கண்டெண்ட்டால் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வரும் ஐஷூ தான் இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இதில் முதல் இரண்டு வாரம் ரவீனா மற்றும் மணி இடையேயான லவ் டிராக் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் ஐஷூவும், நிக்சனும் அவர்களை ஓவர்டேக் செய்துவிட்டனர். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இவன் என்ன கொஞ்சம் கொஞ்சமா அசல் கோளாறாக மாறிக்கிட்டு வர்றான் என வறுத்தெடுத்து வருகின்றனர்.

அவருக்கு அடுத்தபடியாக எலிதினேஷன்  லிஸ்டில் அக்‌ஷயா உள்ளார். இவர்களோடு கானா பாலா மற்றும் அன்ன பாரதி ஆகியோருக்கும் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இவர்கள் நால்வருக்கும் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசமே உள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஐஷூ கடைசி இடத்தில் உள்ளார்.

ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராத்தை எதிர்பாருங்கள் எனக்கூறி வேறு யாராவது கூட எலிமினேட் செய்யப்படலாம். ஆனால் இந்த வாரம் இந்த நால்வரில் ஒருவர் எலிமினேட் ஆகப்போவது மட்டும் உறுதி என்கிறது பிக்பாஸ் ரசிகர்கள் கூட்டம்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...