நடிகர் ஜுனியர் பாலையா மறைவு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் மூத்த நடிகருமான திரு.ஜுனியர் பாலையா அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்

நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ஜூனியர் பாலையா அவர்கள், புகழ்பெற்ற நடிகர் டி.எஸ்.பாலையாவின் மூன்றாவது மகனான இவர் திரையுலகத்திற்கு அறிமுகமானதும் அவருடைய தந்தையாரால் ஜுனியர் பாலய்யா என பெயர் சூட்டி அழைக்கப்பட்டார். இவர் தியாகம், வாழ்வேமாயம், கரகாட்டக்காரன், கோபுரவாசலிலே, சுந்தரகாண்டம், அமராவதி, சாட்டை, கும்கி, தனிஒருவன், புலி, நேர்கொண்டபார்வை, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்றார்.

40 வருடங்களாக தமிழ் சினிமாவில் துணைக்கதாபாத்திரங்களில் நடித்து திரையுலக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அதுமட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். அவரது மறைவு திரையுலகினருக்கு பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது. மேலும் பல்வேறு கட்சி சார்ந்த அரசியல் தலைவர்களும் , திரையுலக ப்ரபலங்களும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!