கனவு
ஐந்தாவது நாளாய்த் தொடருது மழை!
எங்கும் நீர்…எதிலும் நீர்…
தூர் வாரிய குளங்களெல்லாம்
நீர் நிறைந்து கிடக்குது…
ஏர் பூட்டிய உழவர்களும்
நீர் பரப்பிய வயல்களிலே…
குழாயடியில் இல்லை
குடங்களின் மாநாடு..
குருவிகளும் காக்கைகளும்
அருவிகளில் குளிக்கிறது…
தாங்கள் செய்த புண்ணியமே
பூமி செழிப்பாயிருக்குதுன்னு
கூடிப் பேசி களிக்குதுங்க
ஊரிலுள்ள பெரிசுக எல்லாம்…
அம்மாவுக்கும் சந்தோஷம்தான்
அடுப்படியில பால் பொங்குது..
அங்கேயே நில்லம்மா
என்னை வந்து எழுப்பிடாத…
பால் வீணாப்போயிடும் என்
கனவு பாழாப் போயிடும்….!
–செந்தில்குமார் அமிர்தலிங்கம்