இந்த நேரத்தில் முதல்வருக்கும் அமைச்சருக்கும் எனது நன்றிகள் – இயக்குனர் விக்ரமன் உருக்கம்! | தனுஜா ஜெயராமன்
என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் விக்ரமன் தெரிவித்துள்ளார். “என்னுடைய மனைவி குணமாக வேண்டும் , அதுதான் எனக்கு முக்கியம்” என உருக்கத்துடன் தெரிவித்தார் இயக்குனர் விக்ரமன்.
எனது மனைவி 5 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது முதுகில் செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் அவரால் நடக்கவே முடியாது.
இந்த நிலையை விளக்கி நான் பேட்டி கொடுத்திருந்தேன். அதன் எதிரொலியாக மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து நேரில் பார்த்தார். உடன் டாக்டர் பட்டாளத்தையே அழைத்து வந்திருக்கிறார்.
என் மனைவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என இயக்குநர் விக்ரமன் மன உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.