பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ள “இறுகப் பற்று”! | தனுஜா ஜெயராமன்

 பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ள “இறுகப் பற்று”! | தனுஜா ஜெயராமன்

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்த இறுகப்பற்று திரைப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று இத்திரைப்படம் திரையரங்கில் நல்ல வசூலையும் பெற்று தந்தது. உறவுகள் சம்பந்தப்பட்ட சைகாலஜிகல் குடும்ப கதையாக வந்துள்ள இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளதில் ஏதும் ஆச்சர்யமில்லை.

இறுகப்பற்று திரைப்படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதற்கு காரணம்  இதில், திருமணம் ஆன மூன்று ஜோடிகள் குறித்தும் அவர்களது திருமண வாழ்வில் நிகழும் சம்பவங்கள் குறித்தும் விரிவாக இப்படத்தில் காட்சி படுத்தப்பட்டிருக்கும். தமிழ் சினிமாவில நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த நல்ல ஃபீல் குட் படம் இது என்ற அளவில் பெருமளவில் வரவேற்பினை இப்படம் பெற்றிருந்தது.

தற்போது ஓடிடியின் வருகை பெருகியுள்ளதால், சில படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே ஆன்லைன் ஓடிடி தளங்களில் ஸ்டிரீம் செய்யப்படுகின்றன. ஒரு சில படங்கள், நேரடியாகவே வெளியாகின்றன. அந்த வரிசையில் திரைக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத படமான இறுகப்பற்று, ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படம் அடுத்த வாரம் முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, நவம்பர் 3ம் தேதி முதல் இறுகப்பற்று படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம் என சொல்லப்படுகிறது. சர்வதேச அளவில் அதிக பார்வையாளர்களை கொண்டது ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ். இதனால், இறுகப்பற்று திரைப்படம் ஓடிடியிலும் நல்ல ரீச் ஆகும் என படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...