அட பாவிங்களா…இதில இவ்வளவு இருக்கா

 அட பாவிங்களா…இதில இவ்வளவு இருக்கா
  ல  நேரங்களில்  உலகப் பந்தில்  நடைபெறும்  சம்பவங்கள்  காலம் கடந்து உண்மைகளை  உரக்க கூவி  “சமுதாயம்   இப்படித்தான்”  இருந்தது  என பறைசாற்றிவிடும் . உலக வரைபடத்தில்  முதன் முதலாக  மனிதன் வாழ  சட்டதிட்டங்கள்  உருவாக்கப்பட்ட  இடம்  பாபிலோனியா என்ற செய்தியை  கேட்டால் ,வியப்பு  வந்து  உங்கள்  முகங்களில் கோடுயிடும்  என்பது  எனக்கு தெரியும் .ஆனால்  உண்மை  அதுதான் .
   கி.மு .மூவாயிரம்  ஆண்டுகளுக்கு  முன் ஊர்  என்ற சிறு பகுதியில்  மெசபடோமியர்கள்  வந்து  குடியேறினார்கள் இங்குதான்  மனித  இனத்தின்  வளர்ச்சிக்கான  சட்டதிட்டங்கள்  அரங்கேறப்போகிறது  என்பது  அவர்கள் அறியாத  விடயம் . மெசபடோமியர் குடியேறிய  ஊரை மையபடுத்தி  18  சிறிய  ஊர்கள்  தோன்றின .அதில்  இயற்கை தாயோடு மையல் கொண்ட  சிறிய பூமி  பாபிலோனியா .விவிலியத்தில்  கூட  இந்த  பாபிலோனியாவை  குறித்து  பல விடயங்கள்  பகிரபட்டு உள்ளது .
                     கால்நடை வளர்ப்பு  இம்மக்களின்  பிரதான  தொழிலாக  இருந்தது .”இஷ்தார்” என்ற பெண்தெய்வத்தை  வழிபட்ட  இவர்கள் ,பெரிய விழாக்கள்  நடத்தி  தங்கள்  தெய்வத்தை  குளிர்வித்துக்  கொண்டார்கள் 
                  அமுராபி என்ற மன்னனின் ஆட்சி  காலத்தில் ,மனிதன்  வாழ்வதற்கான சட்டதிட்டங்களை  களிமண்ணில்  எழுது பலகை  வடிவமைத்து , அதில்    குறிக்கப்பட்டு  மக்களுக்கு  தெரிவிக்கப்பட்டன . மனித  இனம் வாழ்வதற்கு  என்று  உருவாக்கப்பட்ட  முதல் சட்ட அமைப்பாக  இது  மாறியது .
                  பெண்கள்  தங்கள் வாழ்க்கை  முறைகளை  ஆண்களின்  கட்டுப்பாட்டுக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும் .பெண்ணானவள்  எப்போதும் ஆணின்  முன் அடங்கிப் போக வேண்டும் .ஆண் நினைப்பதை  எல்லாம்  பெண்  நிறைவேற்றி தன்னை அடிமையானவள்  என சமுதாயத்திற்கு சொல்ல வேண்டும்  என பெண்களை  மட்டம் தட்டும்  திட்டங்கள் இதில்  காணப்பட்டது .பெண்  இனம் அடிமையின் சின்னம் என பச்சைக் குத்தப்பட்டது .
                   
              இங்குதான்  பெண்ணினத்தின்  புரட்சி பிரசவம்  கண்டது .உலகை வென்று காட்ட அன்பு என்ற ஆயுதத்தை  கையில் எடுத்து ,அடிமை  என்ற  அடையாளத்தை  சத்தமின்றி  அழிக்க தொடங்கியது ..இன்று  பெண் சமுதாயம் உலகின்  பிரதான  அச்சு..
      அன்பு  என்ற  வார்த்தையின்  மகத்துவம்  எல்லா இறைகளையும்  ஒரு பந்தியில்  அமரவைத்து  விடும் . அந்த சக்தியை  உணர்ந்தவள்  பெண் என்பதால்  கருவில்  குழந்தையை  சுமக்கும்போதே  அன்பை  முதல்  உணவாக  புகட்டி விடுகிறாள் .கருவில்  இருக்கும் மழலையின்  ஒவ்வொரு அசைவிலும்  தன்னை  தொலைக்கும்  தாய்மை  அன்பை  குழந்தைக்கு  கற்றுக் கொடுக்கிறது   என்பது  விஞ்ஞானத்தின்  கூற் று, பெண் இனத்தின்  இந்த  பரிசுதான்  இன்று  உலக  கூட்டிற்கு  சுவாசத்தை தந்துக்  கொண்டு  இருக்கிறது ..
    
  உலகில்  உயர்வானதாக  காட்டப்படும்  எல்லா வேதங்களும்  அன்பைத்தான் கவசமாக்கி கொண்டு  உள்ளன . இங்கு  விவிலியத்தில்  நடந்த  ஒரு விடயத்தை  பதிவிட்டால்  அன்பின்  மகத்துவம் இறை வழிபாட்டினை  விட  உயர்ந்தது என்பது  புலனாகும் ..
  
  யூதாஸ்  என்ற  பெயரை  உச்சரித்தால்  காட்டிக்கொடுத்தவன்  என்ற  அவ வார்த்தைதான்   ஏளனமாக  நிற்கும் . ஒரு தவறை  வைத்து இன்றளவும் கொச்சைபடுத்தப்படும்  யூதாஸின்  பின்னணியை    ஆராய்ந்தால்  அவனுள் உறங்கி  கிடந்த   இன்னொரு  முகத்தை காட்டும் ..
      .
 யூத  மதத்தின்  கோட்பாடுகளில்  யூதாஸ்.   ஊறி   கிடந்தாலும்   மதத்தில் புரையோடிக்  கொண்டிருந்த இழிவு விடயங்களை கண்டு  கொதித்து  போனார்    மதத்தின் பெயரில்  நடந்த  கொடுமைகளை எதிர்க்கும்  மனத்துணிவு   அவரிடம் இல்லை .இச்சுழலில் அன்பை சுமந்து  புது  பயணம்  எடுத்த கிறித்துவின் கொள்கை  யூதாசை  மெய்சிலிர்க்க வைத்தது .  இன்முகத்துடன் கிறித்துவின்  பின் பயணத்தை  அமைத்துக்  கொண்டார் .
       கிறித்துவின்  குழுவில்  யூதாசுக்கு  கணக்கர்  பதவி வழங்கப்பட்டது .ஒவ்வொரு விடயங்களையும் குறிப்பெடுத்து  வைப்பது  யூதாஸின்  வழக்கம்   கிறித்துவால்    நடந்தேறிய  பெரிய அற்புதமான  இரண்டு மீனும்  ஐந்து  அப்பமும் பல ஆயிரம்  மக்களுக்கு வயிறார    வழங்கப்பட்ட  நிகழ்வு ,யூதாஸின்  குறிப்பில்  இருந்து  சுவிசேஷத்தை  எழுதியவர்கள்  எடுத்து  பயன்படுத்திக்கொண்டார்  என்பது  ஆச்சிரியமான தகவல் .
    கிறித்துவின்  கொள்கை  உலகம்  முழுவதும்  செல்ல வேண்டும்  என்றால் பணம்  முக்கியமான விடயமாக  யூதாசுக்கு  தென்பட்டது .மக்தேலான மரியாள்  பரிமள தைலத்தை  கிறித்துவின்  கால்களில் பூசிய  போது ,  பணத்தை  ஏன்  வீணடித்தாய்  என    கடிந்து  கொண்டவர்  யூதாஸ் .கிறித்துவின்  பணிகளில் தன்னை  முழுமையாக  ஈடுபடுத்திக்  கொண்ட  யூதாஸ் ,  அவரைக்  காட்டிக்  கொடுத்து ,ஒரு கணம் கிறித்துவின்  அன்பை  மறந்து தன் நிலைப்பாட்டில்  இருந்து  தடுமாறினார் .சரித்திரம்  இங்குதான்  கிறித்துவை  இறையாக முடிசூடிக்  கொண்டது .
         தனது  உயிர் தோழனை  காட்டிக்  கொடுத்துவிட்டோமே என்ற  குற்ற உணர்வு  யூதாசை மனதளவில் வருத்த,பிலாத்து அரண்மனையில்  யாருக்கும்  தெரியாமல் ஒளித்து  நின்று ,கிறித்துவை  பார்த்து  கண்ணீர் விட்டு அழுதபடி ,பரிசுத்த  மனிதனுக்கு  விரோதமாக  பாவம்  செய்தேன் ,இனி  நான் வாழ்ந்தால்,அப்பாவம் ஆயுள்  முழுவதும்  என்னை தண்டிக்கும் .யூத இனமே ,என் தோழன்  இறப்பதற்கு  முன்  நான்  இறந்து  போகிறேன்  என கூறிக்  கொண்டு  தேவ ஆலயத்தினை  மீது , கிறித்துவை  காட்டிக்  கொடுத்ததற்காக  கிடைத்த கூலியான முப்பது  வெள்ளிக்காசுகளை  வீசிவிட்டு  தற்கொலை  செய்து  மரித்து போனார் .மனம் தடுமாறிய  யூதாசை கிறித்துவின்  அன்பு  வென்றுக்  காட்டியது .
   கிறித்துவின்  வாழ்வியல்  சம்பவங்களை  தொகுத்து  பலர்  குறிப்பேடுகள் எழுதினார்கள் .அவற்றில்  சில விவிலியத்தில்  இடம்  பிடித்து  இருந்தாலும் ,பல  நூல்கள்  திருச்சபையால்  புறம் தள்ளப்பட்டது  .அப்படி  புறம் தள்ளப்பட்ட  ஒரு  நூலில்  கிறித்துவை பார்த்து யூதாசுக்கு  மன்னிப்பு  உண்டா  என உயிர்த்து   எழுந்த    கிறித்துவிடம்  சீடர்கள்  கேட்ட போது, “மன்னிப்பதுதான் தேவகுமாரனின்  பணி.”:யூதாஸ்  என் தோழன் மன்னிக்கப்பட்டு விட்டான் என   கூறியதாக  பதிவுகள்  உண்டு .அன்பை  உலகிற்கு  சொல்ல  இதைவிட சிறந்த  நிகழ்வு  வேறு  எதுவும்  இல்லை   
      
         உலகத்தின்  கடைசி  நாட்களில்  அன்பு தணிந்து போகும்  என  விவிலியம்  சொல்கிறது .இன்று  நடக்கும்  பல நிகழ்வுகள்  அதை  நிரூபிப்பது  போல  உள்ளன . சில தினங்களுக்கு  முன்  தாயின்  அன்பை  புரியாத  மகள்  ஒருத்தி கொடூர மனநிலையில்  தாயை கத்தியால்  குத்தி கொலை  செய்த  சம்பவம் ஒரு  சான்று .. அன்பு நமது  இதய  தாலாட்டின்   இசையானால் ,நம் முகம் நிலவென  வளம் காணும் .   உலகம்  என்ற சூரியனின்  ஒளியில்  அந்த  நிலவு  காலம் முழுவதும்  பிரகாசிக்கும் ..

 கைத்தடி முசல் குட்டி 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...