ஜப்பான் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! | தனுஜா ஜெயராமன்

 ஜப்பான் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்! | தனுஜா ஜெயராமன்

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி, தனது திரையுலக பயணத்தில் இருபது வருடங்களை கடந்து வந்திருக்கிறார். இந்த இருபதாவது வருடத்தில் அவரது 25வது படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

இதை தொடர்ந்து இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலக பயணத்தையும் ஒரு சேர கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்ட விழா நடைபெற்றது.

தாநாயகியாக அனு இம்மானுவேல் நடிக்க நடிகர் சுனில், வாகை சந்திரசேகர், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விஜய் மில்டன் மற்றும் மலையாள நடிகர் சணல் அமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், பிலோமின்ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ வரும் தீபாவளி பண்டிகை வெளியீடாக ரிலீஸாக இருக்கிறது.

விழாவின் ஹைலட்ஸ்:

தன்னை செதுக்கிய திரையுலக சிற்பிகளுக்கு ஜப்பான் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் நன்றி தெரிவித்தார் கார்த்தி.

ஜப்பான் டிரைலர் வெளியீட்டு விழாவில் கார்த்தியின் வளர்ச்சி குறித்து நெகிழ்ந்தார் சூர்யா.

கார்த்தி-25ஐ முன்னிட்டு ஒரு கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்தார் கார்த்தி.

“பருத்திவீரனை போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார் ராஜூ முருகன்.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...