இரண்டு பேர் அவுட்: ஐந்து பேர் இன்…பிக்பாஸ் அட்ராஸிடிஸ்! | தனுஜா ஜெயராமன்

 இரண்டு பேர் அவுட்: ஐந்து பேர் இன்…பிக்பாஸ் அட்ராஸிடிஸ்! | தனுஜா ஜெயராமன்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் அதிரடியாக வெளியேறி விட்டார்கள். ஒருவர் யுகேந்திரன் யாரும் எதிர்பாராத போட்டியாளர். மற்றொருவர் அனைவரும் எதிர்பார்த்த உள்ளே கிலோ கணக்கில் மிக்சர் சாப்பிட்ட வினுஷா தேவி.

ஆனால் ஐந்து வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்துவிட்டனர். தற்போது அது மற்ற ஹவுஸ்மேட்டுகள் நெஞ்சில் கிலி பிடித்துக் கொண்டது. உள்ளே வந்தவர்கள் தினேஷ், அன்னபாரதி, அர்ச்சனா, கானாபாலா, ப்ராவோ. உள்ளே சேப் கேம் ஆடும் விக்ரம் சரவணன் மற்றும் லவ் கேம் ஆடும் மணி சந்திரா, விஷபாட்டலாய் இருக்கும் அய்ஷூ என பலருக்கும் வயிற்றில் புளியை கரைத்திருக்கும் என்பது உண்மை.

நன்றாக விளையாடும் பிரதீப் ,மாயா , ஜோவிகா, பூர்ணிமாவிற்கு அட இதுகளையும் நாம சமாளிக்கணுமான்னு ஆயாசம் ஏற்பட்டது.

வைல்ட் கார்ட்களும் இவர்களை தங்கள் பங்குக்கு வைத்து செய்தனர். தினேஷ் எலிமினேஷன் கார்ட் என கிலி ஏற்படுத்தினார். ப்ராவோ மார்க் போட்டு பயப்படுத்த, அன்னபாரதி பட்டிமன்ற ஸ்டைலில் பட்டையை கிளப்பினார். ஜாலியாக ஒபி அடித்த போட்டியாளர்களுக்கு உள்ளூர பயம் தொற்றிக் கொண்டது. புதியவர்களை நாமினேஷனுக்கு அனுப்ப இப்போதே ப்ளான் போட்டு விட்டனர்.

ஏற்கனவே சின்ன பாஸ் பெரிய பாஸ் ப்ரச்சனைகள் இருக்க இப்போது ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களுக்கும் புதிய வைல்ட் கார்ட் போட்டியாளர்களுக்கும் சண்டை மண்டை உடையலாம்.. தீபாவளி பாம் கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ்… வெடிக்குமா? நமநமத்து போகுமா பார்க்கலாம்…!

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...