எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள ஜப்பான் டீஸர்! | தனுஜா ஜெயராமன்

 எதிர்பார்ப்பிற்கிடையே வெளியாக உள்ள ஜப்பான் டீஸர்! | தனுஜா ஜெயராமன்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படத்தில் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட் ஒன்று வெளியாகிறது.

இதில் கதாநாயகியாக ‘துப்பறிவாளன் படத்தில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார்.

குக்கூ, ஜோக்கர் & ஜிப்ஸி என சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தில் 25வது திரைப்படமாக கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் தான் ஜப்பான்.

கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பு கவனிக்கிறார்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் எல்லாம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், ‘ஜப்பான்’ படத்தின் புதிய அப்டேட்டை ஒன்றினை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படியாக கார்த்தியின் “ஜப்பான்“ படத்தின் டீஸர் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...