இனி வெறும் 70 ரூபாயில் சினிமா: சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஐநாக்ஸ்! | தனுஜா ஜெயராமன்
மல்டிபிளக்ஸ் ஆபரேட்டர் பிவிஆர் ஐநாக்ஸ் இந்திய திரையரங்க வர்த்தகத்தில் தனி கார்ப்ரேட் நிறுவனமாக பெரும் ஆதிக்கத்தை கொண்டு இருக்கும் வேளையில் புதிய பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வகையில் புதிதாக சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த தயாராகியுள்ளது.
பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் 699 ரூபாய் விலையில் மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் வார நாட்களில் மட்டுமே செல்லுப்படியாகும், அதாவது சனி மற்றும் ஞாயிறு செலுப்படியாகாது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு வார நாட்களில் சுமார் 10 திரைப்படங்களை ஒவ்வொறு திரைப்படத்தையும் வெறும் 70 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் என்று பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்தால் இந்தியாவில் திரையரங்குகளில் வழங்கப்படும் முதல் திரைப்பட சப்ஸ்கிரிப்ஷன் சலுகை இதுவாக தான் இருக்கும்.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டம் தென்னிந்திய பகுதியில் இல்லை என்பது தான். மேலும் இந்த சப்ஸ்கிரிப்ஷன் திட்டம் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் இன்சிக்னியா, ஐமேக்ஸ் போன்ற பிரீமியம் ஸ்கிரீனில் கிடைக்காது.