மந்தமான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்யும் டிசிஎஸ்!
மந்தமான வர்த்தக வளர்ச்சியை பதிவு செய்யும் டிசிஎஸ்!
டிசிஎஸ் சிஇஓ கே கிருதிவாசன் நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வளர்ச்சி மிகவும் மந்தமாகவும் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இருக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் டிசிஎஸ் நிர்வாகம் இந்த வருடம் மிகவும் மந்தமான வர்த்தக வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என கூறப்படுகிறது. முதல் 2 காலாண்டில் முடக்க நிலை வளர்ச்சியை பதிவு செய்தது.
59 வயதான கே கிருதிவாசன் ஜூன் மாதம் தான் டிசிஎஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்றினார். இவருடைய பதவி காலம் ஐடி துறைக்கு மிகவும் மோசமாக காலக்கட்டத்தில் இருக்கும் போது வந்துள்ளது, இதனால் யாரும் எதிர்கொள்ளாத சவால்களை ஆரம்பம் முதல் எதிர்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் நிலைமை இதுதான் என அதன் டிசிஎஸ் கே கிருதிவாசன் கூறியது டிசிஸ் ஊழியர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி நிறுவன ஊழியர்கள், ஐடி நிறுவன முதலீட்டாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அடுத்த 2 காலாண்டில் ஒட்டுமொத்த ஐடி சேவை துறைக்கும் சர்வதேச அளவில் மோசமான காலக்கட்டம் என்பதால் மந்தமான வளர்ச்சியை மட்டுமே டிசிஎஎஸ் எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது என கே கிருதிவாசன் தெரிவித்தார். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனம் என்பதால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்திய ஐடி சேவை துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஐடி சேவைக்கு அதிகப்படியான டிமாண்ட் இல்லை, ஆனால் சந்தையின் சூழ்நிலை மேம்பட்டால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ள திட்டங்கள் பலன் அளிக்கும் எனகிறார் கிருதிவாசன்.