ஜெயிக்கப்போவது யார்? இந்தியா vs பாகிஸ்தான் – உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்! | தனுஜா ஜெயராமன்

இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டத்தில் (3-ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்) டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்த உலகக் கோப்பை தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்க படும் ஆட்டம் என்றாலே அது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி தான். இரு அணிகள் ஆக்ரோஷமாக களத்தில் மோதிக்கொள்ளும் ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து.

குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். உலகக் கோப்பை தொடர்களில் இதுவரை நடைபெற்ற 7 போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்த சாதனையை தொடரும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்த பரபரப்பான போட்டியை முன்னிட்டு அகமதாபாத் மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!