திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா துவக்கம்! | தனுஜா ஜெயராமன்

 திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா துவக்கம்! | தனுஜா ஜெயராமன்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிகச்சிறப்பாக செய்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் பூஜை நடைபெறுகிறது இரவில் சாமி நாற்காலி வாகனத்தி பவனி வருதல் நடக்கிறது. கொடியேற்று நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாளை காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி, ஆகியவை நடக்கிறது.

3ம் நாள் (16-ந் தேதி) காலை 8 மணிக்கு நாரணீய பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி ஆகியவை நடக்கிறது.

நான்காம் நாள் (17-ந்தேதி) இரவு.7.30 மணிக்கு நடன நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் ஆகியனவும் 5-ம் நாள் (18-ந்தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடி யேற்றமும், 9 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பவனியும், 10 மணிக்கு நள சரிதம் கதகளி ஆகியவையும், 6. ம் நாள் (19-ந்தேதி) இரவு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு தேவயானி சரிதம் கதகளி ஆகியன நடக்கிறது. ஏழாவது நாள் இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனியும், தொடர்ந்து தோரண யுத்தம் கதகளியும் நடைபெறுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...