வரலாற்றில் இன்று (01.10.2023)
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
அக்டோபர் 1 (October 1) கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 331 – மகா அலெக்சாண்டர் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனை போரில் வென்றான்.
959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1787 – “சுவோரொவ்” தலைமையில் ரஷ்யர்கள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தனர்.
1788 – நியூவென் ஹியூ வியட்நாமின் மன்னராகத் தன்னை அறிவித்தார்.
1795 – பிரான்ஸ் பெல்ஜியத்தைப் பிடித்தது.
1799 – புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.
1800 – ஸ்பெயின் லூசியானாவை பிரான்சிடம் தந்தது.
1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியென்னா காங்கிரஸ் கூடியது.
1827 – இவான் பஸ்க்கேவிச் தலைமையில் ரஷ்ய இராணுவம் ஆர்மேனியாவின் தலைநகர் யெரெவானைப் பிடித்தது.
1843 – நியூஸ் ஒஃப் தெ வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
1869 – உலகின் முதல் தபால் அட்டை ஆஸ்திரியாவில் வெளியிடப்பட்டது.
1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1880 – முதலாவது மின் விளக்கு தொழிற்சாலையை தொமஸ் எடிசன் ஆரம்பித்தார்.
1887 – பிரித்தானியரினால் பலூசிஸ்தான் கைப்பற்றப்பட்டது.
1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது. பதிலாக வெள்ளி நாணயம் அறிமுகமானது.
1895 – பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.
1898 – ரஷ்யாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
1910 – லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கஸ் நகரைக் கைப்பற்றினர்.
1931 – ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம் திறக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேப்பில்ஸ் கூட்டுப் படைகளிடம் வீழ்ந்தது.
1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
1953 – ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
1960 – சைப்பிரஸ், மற்றும் நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றன.
1961 – கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
1965 – இந்தோனேசியாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சி ஜெனரல் சுகார்ட்டோவினால் முறியடிக்கப்பட்டது.
1969 – கொன்கோர்ட் விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தை மீறியது.
1971 – வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் அமைக்கப்பட்டது.
1975 – சிஷெல்ஸ் சுயாட்சியைப் பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.
1977 – பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.
1978 – துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
1982 – சொனி நிறுவனம் முதலாவது குறுந்தட்டு ஒலிபரப்பு சாதனத்தை (CDP-101) வெளியிட்டது.
1992 – விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
1994 – பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
2001 – ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
பிறப்புகள்
1847 – அன்னி பெசண்ட், பெண் விடுதலைக்குப் போராடியவர் (இ. 1933)
1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது குடியரசுத் தலைவர்
1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
1928 – ஜூ ரோங்ஜி, சீனத் தலைவர்
1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
1947 – ஆரன் சீசேனோவர், நோபல் பரிசு பெற்ற இசுரேலியர்
இறப்புகள்
1973 – பாபநாசம் சிவன், கருநாடக இசை, தமிழிசை அறிஞர் (பி. 1890)
2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர்
சிறப்பு நாள்
மக்கள் சீனக் குடியரசு தேசிய நாள் (1949)
சைப்பிரஸ் – விடுதலை நாள் (1960)
நைஜீரியா – விடுதலை நாள் (1960)
துவாலு – விடுதலை நாள் (1978)
சிங்கப்பூர் – சிறுவர் நாள்
ஆர்மேனியா – ஆசிரியர் நாள்
அனைத்துலக முதியோர் நாள்
அக்டோபர் 1-7 உலக வனவுயிரி வாரம்