“அடியே” டைம் டிராவலில் ஒரு காதல்! – பட விமர்சனம்| தனுஜா ஜெயராமன்
ஜிவி ப்ரகாஷ் கதாநாகனாக நடித்து விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள சயன்ஸ் பிக்ஷன் கலந்த காதல் கதை தான் “அடியே”. கதாநாயகியாக கௌரி கிஷன். டைம் டிராவலை அடிப்படையாக கொண்ட காதல் கதை இது.
நிஐ உலகம் இணை உலகம் என மாறி மாறி பயணம் செய்து கதாநாயகியை காதலிக்கிறார் ஜிவி ப்ரகாஷ். பல இடங்களில் கதாநாகன் குழம்புவதை போலவே நம்மையும் குழப்பியடிக்கிறார் இயக்குனர். வெங்கட் பிரபு சொல்வது போல டைம் டிராவலுக்குன்னு ஒரு மரியாதை வேண்டாமா? ஒலா உபரில் போவதை போல போய் வந்து என காமெடி செய்வதாக தோன்றுகிறது.
இணை பிரபஞ்சம் என சில நம்ப முடியாத விஷயங்களை படத்தில் வைத்திருப்பது புதுமையாக இருந்தாலும் ரசிக்கும் படி இல்லை.
நேரில் இருக்கும் கௌரி கிஷனிடம் காதலை சொல்லாமல் டைம் டிராவலில் சொல்ல நினைப்பது பக்கா லாஜிக் ஓட்டை.
ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை மற்றும் பாடல்களும் இனிமை. கோகுல் பினோயின் வண்ணமயமான ஒளிப்பதிவு அருமை.
ஜிவி பயங்கரமாக நடிக்க முயல்கிறார் ஆனால் கதை ஒட்ட மறுக்கிறது. கௌரி கிஷனுக்கு மற்றொரு 96 கதாபாத்திரம். அதையே காப்பியெடுத்த மாதிரி எனலாம்.
நிஜ உலகில் ஆல்டர்னேட் ரியாலிட்டி கருவியைத் தயாரிக்கும் விஞ்ஞானிகள் குழுவின் தலைவராகவும் மாற்று உலகில் அறிவியல் புனைவுப் படங்களை இயக்கும் கவுதம் மேனன் ஆகவும் இரண்டிலும் கலக்கியிருக்கிறார் வெங்கட்பிரபு.
இணை பிரபஞ்சத்தில் பிரபலங்கள் வேறு துறையில் மிளிர்வது நல்ல சுவையான கற்பனை..
“அடியே” சொதப்பலான காதல் கதை.. வலிந்து திணிக்கப்பட்ட சயின் பிக்ஷன் டைம் ட்ராவல் நம்பமுடியாத கற்பனை. படம் சொல்லும் செய்தி என எதுவும் இல்லை..
நேற்று முதல் சோனி லைவில் காண கிடைக்கிறது.. ஒரு முறை காணலாம்!!!