விண்ட்ஃபால் வரி பற்றி தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

 விண்ட்ஃபால் வரி பற்றி தெரியுமா? | தனுஜா ஜெயராமன்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படும் போது அதன் மீது மத்திய அரசு விதிக்கும் விண்ட்ஃபால் வரியை ஒரு டன்னுக்கு 10,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை உயர்த்துவதாக அறிவித்தது. இப்புதிய வரி விகிதங்கள் செப்டம்பர் 30, 2023 முதல் அமலுக்கு வருகிறது.

சமீபத்தில் மத்திய அரசு கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல் மீதான விண்ட்ஃபால் வரி விதிப்பை ஒவ்வொரு 2 வாரத்திற்கும், அல்லது கச்சா எண்ணெய் விலை மாற்றத்தின் அடிப்படையில் வரி திருத்தப்படுகிறது.

இதேபோல் டீசல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு 6 ரூபாயில் இருந்து 5.50 ரூபாயாக குறைக்கப்பட்டது மற்றும் ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) மீதான வரி 4 லிட்டர் ரூபாயில் இருந்து 3.50 ரூபாயாக குறைக்கப்பட்டது. இதற்கு முன்பு ஜூலை 1, 2022 அன்று பெட்ரோல் மற்றும் ஏடிஎஃப் மீது லிட்டருக்கு ரூ.6 ஏற்றுமதி வரியும், டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.13 வரியும் விதித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு ஒரு டன்னுக்கு ரூ.23,250 வரி விதிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான விண்ட்ஃபால் வரியை லிட்டருக்கு 5.50 ரூபாயில் இருந்து 5 ரூபாயாகவும், ஏவியேஷன் டர்பைன் எரிபொருள் (ATF) லிட்டருக்கு 3.50 ரூபாயில் இருந்து 2.50 ரூபாயாகவும் குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல் ஏற்றுமதி தொடர்ந்து விண்ட்ஃபால் வரி வரம்பிற்கு வெளியே உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளது.

செப்டம்பர் 15 மத்திய அரசு விண்ட்ஃபால் வரியை திருத்தம் செய்தது, அப்போது கச்சா எண்ணெய் மீதான விண்ட்ஃபால் வரியை டன்னுக்கு ரூ. 6,700 லிருந்து ரூ.10,000 ஆக மத்திய அரசு உயர்த்தியது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...