லேஆப் என்கிற பணிநீக்கத்தால் தப்பித்த நிறுவனங்கள்! | தனுஜா ஜெயராமன்
2022 முதல் இன்று வரை, இந்தியாவில் ஏறக்குறைய 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 31,965 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக சந்தை தரவுகள் கூறுகிறது. இந்த பணிநீக்கத்தின் மூலம் பல நிறுவனங்கள் லாபத்தை கூட்டியும், வர்த்தகத்தை காப்பாற்றியும், பல நிறுவனங்கள் திவால் ஆகாமல் தப்பித்துள்ளது என்றால் மிகையில்லை.
ஆனால் பணிநீக்கத்தில் ஈடுப்பட்டு உள்ள 95 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை தேவைக்கும் அதிகமாக பணியாளர்களை பணியில் சேர்த்துள்ளது. இதனாலேயே அதிகப்படியான பணிநீக்கம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர், இது முற்றிலும் நிறுவனங்களின் தவறு என்றால் மிகையில்லை.
இந்த நிலையில் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் கடந்த சில மாதங்களில் பணிநீக்கங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் மீண்டும் வேலைவாய்ப்பு அளவுகள் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையை எழுந்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டிலும் பணிநீக்கம் நடந்துள்ளது, 2023 ஆம் ஆண்டில் மட்டும், தோராயமாக 49 ஸ்டார்ட்அப்கள் கிட்டத்தட்ட 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்த பணிநீக்கத்தை மிகவும் அமைதியான முறையில் நடத்தும் காரணத்தால், உண்மையான பணிநீக்கங்களின் எண்ணிக்கை வெளிவரவில்லை.
இந்தியாவின் முன்னணி எட்டெக் நிறுவனமான பைஜூஸ் இந்த வாரம் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் மறுசீரமைப்பு நடவடிக்கையும் சேர்த்து, 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 30,000த்திற்கும் மேல் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.