நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.
தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்
படிப்பாளி, படைப்பாளி,
ஆட்சியர், அதிகாரி,
எழுத்தாளர், பேச்சாளர்,
சிந்தனையாளர் என்ற
பல்வேறு பரிணாமங்கள்….. உள்ள
தமிழர். ஐயா இறையன்பு அவர்கள்.
அவர்களது பிறந்தநாள் இன்று.
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்.
இறையன்பு என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர். இவர் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி, எழுத்தாளர், பத்தியாளர், கல்வியாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர். இவர் பன்முகத் திறமைகளுடைய ஒரு பேராளுமை. தமிழக இளைஞர்களிடையே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதே இவருடைய குறிக்கோள்.
1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்த இறையன்பு பள்ளிக்காலம் தொட்டே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தன்னை மாற்றிக்கொண்டார். இவருடைய மூத்த சகோதரர் திருப்புகழும் குஜராத் பணிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது இவர் மேற்கொண்ட பேரிடர் மேலாண்மைப் பணிகள் குறிப்பிடத்தக்கவை. இவருடைய திறமை மற்றும் அனுபவம் காரணமாக நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னால் அதன் மறுசீரமைப்புப் பணிகளைக் கையாளுவதற்காக அந்நாட்டு திட்டக்குழுவின் ஆலோசகராக அழைக்கப்பட்டார்.
இவரது பல புத்தகங்கள் என்னிடம்
உள்ளது.. இவரது படைப்புகள் அனைத்தும் அபாரம்… நான் விரும்பும்
புத்தகங்கள்.. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் போல் இவரது
பெருவாரியான படைப்புக்களை
படித்துக் கொண்டு இருக்கிறேன்..
இவர் படைத்த
பல படைப்புகளை
நான் வைத்திருக்கிறேன்.
அலுவலுக்கு இடையில்
எப்படி? எங்கே?
எழுதினார் என்றே
ஆச்சரியம்….
எனக்கு வேலை இருக்கிறது
என்று நாம் சொல்வது
நமக்கே வெட்கமாக இருக்கிறது.
ஒன்றா இரண்டா
எடுத்துச் சொல்ல..
ஒன்றா இரண்டா
எடுத்துச் செல்ல…
அரிய தகவல்கள்
அறியாத தகவல்கள்
அறிய வேண்டிய தகவல்கள்.
படிக்க படிக்க ஆச்சரியம்..
எவ்வளவு தகவல்கள்… இதுவரை
அறிந்திராத பல சம்பவங்கள்..
சிறு சிறு கதைகள் சிதறு தேங்காயாக..
இவருக்கு வாழ்த்துகள் என்பது
நம் தமிழுக்கு வாழ்த்துகள் போல….
தமிழ் வாழ இவர் வாழ வேண்டும்.
வெற்றி நிச்சயம்
விசு