அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ! | தனுஜா ஜெயராமன்

 அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ! | தனுஜா ஜெயராமன்

அதர்வாவுக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஷி கபூர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகியிருக்கிறார்.

ஸ்ரீதேவியின் மகளும், வலிமை, துணிவு போன்ற படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருமான போனி கபூரின் மகளான குஷி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிகை ஶ்ரீ தேவி தமிழ்சினிமாவின் கனவுகன்னியாக வலம் வந்தவர். தமிழிலும் இந்தியிலும் கொடி கட்டி பறந்தவர். இவருக்கு ஜான்வி குஷி என்று இரண்டு மகள்கள். இதில் தற்போது குஷி கபூர் ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாகி இருப்பவர்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்

அதர்வா நடிகர் முரளியின் மகன் என்பதோடு மட்டுமல்லாமல் திறமையான அழகான இளம் நடிகர். இவர் முப்பொழுதும் என் கற்பனைகள் , ஈட்டி என பல படங்களில் நடித்தவர்.

அதர்வாவின் கேரியரில் இன்று வரை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பிரமாண்ட உருவாக இருக்கும் இப்படம், அமெரிக்காவில் படமாக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இப்படம் அதர்வாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மைல் கல்லாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தனுஜா ஜெயராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...